"சம்பவம்" இருக்கு.. திமுக அரசை கலைக்கிறார்களா.. உளவுத்துறைக்கு குறி? அண்ணாமலை மீது பாய்ந்த லட்சுமணன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பத்திரிகையாளர் லட்சுமணன் கருத்து கூறியுள்ளார்
சென்னை: கோவை சிலிண்டர் விபத்தில், சைலேந்திரபாபு கடைசிவரை உண்மையை சொல்லவில்லையானால், 15 நாட்கள், 20 நாட்கள் கழித்து அந்த ஆதாரத்தை வெளியிடுங்களேன்.. இப்பவே வெளியிட்டால் அது சாட்சியங்களை கலைத்துவிடும்.. குற்ற விசாரணையை தடுக்கிற வேலை இது.. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்பெஷல்ஸ்
அண்ணாமலையின் இந்த காட்டம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அண்ணாமலைக்கு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.. லட்சுமணன் நம்மிடம் பேசியது இவைதான்: "தீவிரவாத தாக்குதல், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, வெளிநாட்டு சதி, இப்படியெல்லாம் முடிவு செய்வதற்கு முன்பாக, இந்த விஷயத்தை சாதாரணமாகவும் நாம்எடுத்துக் கொள்ளக்கூடாது.. வெடிவிபத்து நடந்த அந்த நாள் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருந்த சமயம், ஒரு கோயில் வாசல் பகுதியில் வெடித்துள்ளது..

தப்பு.. தப்பு.. தப்பு
சிலிண்டரை தவிர வேறு பொருட்களும் அங்கு இருந்துள்ளன.. உயிரிழந்த நபரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பக்கத்து வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள், இவைகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது, நடந்த நிகழ்வு இயல்பான, சாதாரணமானது இல்லை.. இதை அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள்.. இதில் பிரச்சனை எங்கு வருகிறதென்றால், விசாரணை நடந்து கொண்டிருக்கிறபோதே, என் கையில் ஆதாரம் இருக்கு, இதுகுறித்து அரசு ஏன் அமைதி காக்கிறது? என்று விசாரணை பாதிப்பது போல, ஐபிஎஸ் அதிகாரியாகவே இருந்து ராஜினாமா செய்த அண்ணாமலை பேச்சும், பேசும் விதமும் தவறு.. தவறு.. தவறு..

FIR
ஒரு முதிர்ச்சியான அரசியல் கட்சி தலைவராக அவர் பேச்சு இல்லை.. "நானும் இத்தனை நாளும் வெயிட் செய்தேன்.. இதையெல்லாம் அரசு சொல்லும் என்று நினைத்தேன்.. ஆனால், சொல்லவே இல்லை, எப்ஐஆரில் இல்லை.. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இல்லை" என்றெல்லாம் ஒருகாலட்டத்தை கடந்து இந்த அரசை இப்படியெல்லாம் அம்பலப்படுத்தினால் பரவாயில்லை.. ஆனால், சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, நடுநடுவே ட்விட்களை போடுவது, பத்திரிகையாளர்களை சந்தித்து அரசு மீது புலம்புவது, இதெல்லாம் விசாரணையை பாதிக்கிற செயல் ஆகும்..

திமுக டிஸ்மிஸ்
அப்படியானால் உங்களின் உண்மையான நோக்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட வேண்டும் என்பதல்ல, இந்த சம்பவத்தையும் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைப்பதுதான், என்று பொதுமக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இதில் பல பேர் இறந்திருந்தால், இந்த அரசு கலைக்கப்பட்டிருக்கும் என்கிறார்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவ்வளவு சுலபமாக கலைக்க முடியாது என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருப்பவர்கள்தான் இப்படியெல்லாம் பேசுவார்கள்.. அண்ணாமலை இப்படி பேசுவது எனக்கு அதிர்ச்சியை தருகிறது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை உங்கள் இஷ்டத்துக்கெல்லாம் கலைக்க முடியாது..

அம்பலம்
தீவிரவாதத்தை பற்றி பேசுகிறபோது, அரசியலை புகுத்துவது, அதன் பின்னணியில் மதத்தை புகுத்துவது தவறு.. இதை அண்ணாமலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த அரசு முதலில் எந்த திசையில் போகிறது என்பதை அண்ணாமலை கவனித்து பார்க்க வேண்டும்.. அப்படி கவனித்துவிட்டு, எங்காவது தவறு இருந்தால், அதை எங்காவது அரசு மூடி மறைத்தால், அப்போது அனைவருமே அதை அம்பலப்படுத்த வேண்டும்.. பத்திரிகையாளர்களுக்கும் அந்த கடமை இருக்கிறது.. ஆனால், அதை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை.. விசாரணையை பாதிக்கும் மாதிரி எதையும் செய்துவிட கூடாது..

டிஜிபி மெயின் ரோல்
கலவரங்கள் தற்போது தமிழகத்தில் பெருகி வருவதால், கூடுதல் கவனத்தை முதல்வர் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.. உளவுத்துறையை மட்டும் இங்கே குறைசொல்ல முடியாது.. அப்படியென்றால் டிஜிபிக்கு என்ன வேலை? மாவட்ட எஸ்பிக்களுக்கு என்ன வேலை? ஏடிஎஸ்பிக்களுக்கு என்ன வேலை? அனைவருக்குமே இங்கு கூட்டு பங்கு உள்ளது.. அண்ணாமலை உளவுத்துறையை மட்டுமே டார்கெட் செய்ய என்ன காரணம்? அப்படியென்றால், ஏற்கனவே எடுத்த பாஸ்போர்ட் ஆயுதம், கூர்மழுங்கி வீணாகி போனதால், மீண்டும் ஒரு ஆயுதத்தை அண்ணாமலை கையில் எடுக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது..

உளவுத்துறை
அதற்காக உளவுத்துறை தாங்கள் பணியை சரியாக செய்தார்கள் என்று நான் சர்ட்டிபிகேட் கொடுக்க வரல.. ஆனால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்றும் நாம் சொல்லிவிடவும் முடியாது.. நடந்த கலவர சம்பவங்களை எல்லாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனிவரும் காலங்களில் அப்படி எதுவும் நடக்காதவாறு அனைவருமே பார்த்து கொள்ள வேண்டும்.. அதைவிட்டுவிட்டு நடந்த தவறுகளை மட்டும் பிடித்துக்கொண்டு, அதையே பூதாகரப்படுத்தி, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைப்பதோ, பயமின்றி இருக்கும் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்த முயல்வதோ தவறு.

ஓபன் டாக்
கியாஸ் வெடிப்பு சம்பவத்தில் இவ்வளவு நியாய உணர்வுடன் கருத்து சொல்லும் அண்ணாமலை, கொஞ்சம் வெளிப்படைத் தன்மையுடனும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.. இன்னும் கூடுதல் நியாயம் அவருக்கு வேண்டும்.. இங்கே உளவுத்துறை மீது குற்றம்சொல்லும் அதே நேரத்தில் என்ஐஏ மீதும் குற்றம் சொல்லி இருக்கணும்.. 2019-ல் விசாரித்தபோதும் குற்றம் சொல்லி இருக்கணும்.. முபீன் வீட்டுக்கு போனார்கள் என்றால், குறைந்தபட்சம் ஆதாரம் இல்லாமல் நுழைந்திருக்க முடியாது.. சில தகவல் பரிமாற்றங்களை கேள்விப்பட்டுதான் முபீன் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்..

டிஜிபி + IAS
2019-ல் வழக்கு பதியப்படவில்லையே தவிர, ஏன் கண்காணிக்க தவறினீர்கள்? அப்படியானால் பொறுப்பை யார் சுமக்க வேண்டும்? என்ஐஏவும் சேர்ந்துதான் சுமக்க வேண்டும்.. ஏன் அண்ணாமலை வாய்மூடி மவுனியாக இருக்கிறார்? யாரை காப்பாற்ற நினைக்கிறார்? மாநில அரசு என்று ஏன் பிரித்து பார்க்கவேண்டும்? அண்ணாமலைக்குதான் எல்லா டீடெயிலும் கிடைக்கிறதே, மாநில உளவுத்துறைக்கு என்ஐஏ அனுப்பிய எச்சரிக்கை நோட்டீஸ் ஏதாவது அனுப்பப்பட்டுள்ளதா? அந்த அறிக்கையையும் வெளியிட வேண்டியதுதானே? அப்படி ஆதார அறிக்கை இருந்தால், அதை வெளியே சொல்ல வேண்டும்..

ஜஸ்ட் 12 மணி நேரம்
இப்போது சொல்லக்கூடாது, சிறிது நாள் கழித்து அந்த ஆதாரத்தை வெளியிட்டால், அது மக்களுக்கும் பயன்படும், முதிர்ச்சியான தலைவர் என்று மக்களும் பாராட்டுவார்கள்.. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டதாக அண்ணாமலை சொல்கிறாரே.. சம்பவம் நடந்து 12 மணி நேரத்துக்குள்ளேயே உள்ளே இருந்தது யார் என்று அடையாளம் கண்டுபிடித்து, அவர்களின் வீட்டையும் கண்டுபிடித்து, பொருட்களையும் பறிமுதல் செய்து, அவர்களையும் கைது செய்து, சிசிடிவியும் கைப்பற்றப்பட்டு, அதில் இருந்த 5 பேரையும் கண்டுபிடித்து, கைது செய்து உள்ளே வைத்திருப்பார்களா? கைகள் கட்டப்பட்டிருந்தால் இதெல்லாம் சரியாக நடக்குமா?

ஏஜென்சி
எப்பவுமே ஒரு சம்பவம் நடந்தால், அதற்கான விசாரணைக்கு கால அவகாசம் தர வேண்டும்.. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, தனக்கு மத்திய ஏஜென்சியிடம் கிடைக்கக்கூடிய தகவல்களை கையில் வைத்துக் கொண்டு, அரசுக்கு செக் வைத்தால் எப்படி? கொஞ்சமாவது வெயிட் செய்ய வேண்டாமா? சைலேந்திரபாபு அந்த உண்மையை கடைசிவரை சொல்லவில்லையானால், 15 நாட்கள், 20 நாட்கள் கழித்து அந்த ஆதாரத்தை வெளியிடுங்களேன்.. இப்பவே வெளியிட்டால் அது சாட்சியங்களை கலைத்துவிடும்.. குற்ற விசாரணையை தடுக்கிற வேலை இது.. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications