கடைசியில் பணிந்தது பாஜக.. "கொஞ்சம் புரிஞ்சிக்குங்க சார்".. எல்லாமே உல்டாவா போச்சே.. இவ்ளோ இருக்கா?
சென்னை: திமுகவுக்கு எதிரான முற்றுகை போராட்டம் என்று அறிவித்துவிட்டு, வெறும் ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக நடத்தி முடித்திருக்கிறது.. இதற்கு என்ன காரணம்? இதுகுறித்த சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
எம்பி தேர்தலுக்கு முன்பேயே, பலம்வாய்ந்த திமுகவை வீழ்த்த, பக்காவாக காய்களை நகர்த்தி வருகிறது பாஜக.. முக்கியமாக "டேமேஜ்" செய்வதன் மூலம், திமுக மீதான நன்மதிப்பை குறைக்கும் வியூகத்தையும் கடந்த 2 வருட காலமாகவே தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

பாஜக முரண்: இந்த புள்ளியிலிருந்துதான், அதிமுகவுடன் முரண்பட்டு நிற்க தொடங்கியது பாஜக.. நிஜமான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற அஸ்திரத்தையும், திராவிட கட்சிகள் மீது வீச துவங்கியது. அந்த நேரத்தில், உட்கட்சி பிரச்சனையால், சற்று சுணங்கிப்போன அதிமுக, இந்த விஷயத்தில் அண்ணாமலையிடம் கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். அதிமுக Vs திமுக என்பதையும் முறியடித்து, திமுக Vs பாஜக என்ற கோணத்தை முன்னெடுத்தது பாஜக..
ஆனால், இது தமிழக அரசியலுக்கு சாத்தியமாகாது என்றாலும், அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க, கமலாலயம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், உழைப்பும் அதிகம் என்றே சொல்லலாம். அதில் ஓரளவு வெற்றியையும் பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.. இதோ அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது..
2 அமைச்சர்கள்: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து சென்னையில், அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தி முடித்துள்ளனர்.. இந்த நிகழ்வுகளில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் குறித்த சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
அதாவது, தமிழக இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக போராட்டம் நடத்தும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்ததுடன், செப்டம்பர் 11-ந்தேதி நடத்தப்படும் என்று தேதியும் குறித்தார். ஆனால், திட்டமிட்டப்படி இந்த முற்றுகைப்போராட்டத்தை நடத்தாமல், கண்டன ஆர்ப்பாட்டமாக வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது பாஜக... இப்படி திடீரென பிளான் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?
முற்றுகை போராட்டம்: முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதியை வாங்கச்சொல்லி அமைப்பு செயலாளர் கேசவவிநாயகத்திடமும், சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தாராம் அண்ணாமலை. (முற்றுகை போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி தரமாட்டார்கள் என்பது கூட பாஜகவுக்கு தெரியவில்லை என்பது வேறுவிஷயம்).
இதனையடுத்து, சென்னை மாநகர காவல்துறையை, கேசவ விநாயகமும் நாகராஜனும் அணுகியிருக்கிறார்கள்.. முற்றுகை போராட்டத்தை அனுமதிக்க மறுத்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் எல்லோரையும் கைது செய்து ரிமாண்ட் செய்துவிடுவோம் என்று சற்று அழுத்தமாக கூறியிருக்கிறது..
கெஞ்சிய பாஜக: உடனே இதைக்கேட்டு பயந்து போன, பாஜக தலைவர்கள், "போராட்டதை தலைவர் அறிவிச்சிட்டாரு. எப்படியாச்சும் நடத்தனும் சார். மாற்று வழி இருக்கான்னு சொல்லுங்க சார்... எங்க நிலைமையை புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சியுள்ளனர்.
அவர்களின் கெஞ்சலை சகித்துக் கொள்ள முடியாமல், "வள்ளுவர் கோட்டத்தில் நடத்திக்கோங்க. ஆனா, முற்றுகைன்னு வரக்கூடாது. ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் நடத்திக்கோங்க" என்று சொல்ல, மறுபேச்சோ விவாதமோ இல்லாமல் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டார்களாம் சீனியர்கள்.
ரிமாண்ட்: உடனே இந்த விஷயத்தை அண்ணாமலையிடம் கேசவவிநாயகம் சொல்ல, அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் பாஜகவின் முற்றுகை போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாறியிருக்கிறது. 'ரிமாண்ட்' என்ற வார்த்தையை கூட பாஜகவினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ரிமான்ட் என்றாலே பயப்படுகிறார்களே என்ற விமர்சனத்தையும் திமுகவினர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்..!!!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications