சல்லி சல்லியா போகுதே.. அலறவிடும் எடப்பாடி பழனிசாமி.. பதறாத பாஜக.. ஒருவேளை "அது"வா இருக்குமோ.. போச்சு
சென்னை: பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதாக தெரிகிறது. ஆனால், கூட்டணி விவகாரத்தில் அதிமுக தன்னுடைய முடிவை அறிவித்து இத்தனை நாளாகியும்கூட, தமிழக பாஜக எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் உள்ளது ஏன் என்ற குழப்பம் பரவலாக எழுந்துள்ளது.
பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்ட நிலையில், ஒருசில அதிரடிகளை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அந்தவகையில், தென்மண்டலம் + கொங்குமண்டலம் என 2 பக்கமும் குறி வைத்துள்ளார்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தமட்டில், பாஜகவை வீழ்த்துவதற்கான வேலைகளில் அதிமுக உள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்குவில்தான், ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுக மண்ணை கவ்வியது.. பாஜகவை சேர்க்காமல் பிரச்சாரத்தை முடித்தபோதும், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் போதுமான அளவுக்கு கை கொடுக்கவில்லை.

பழனிசாமி ப்ளான்: அதனாலேயே கொங்குவை மீட்க வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், இந்த கூடுதல் முயற்சியை அதிமுக முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற வேட்பாளர், பசையுள்ள வேட்பாளர்களையும் நிறுத்த திட்டமிட்டு வருகிறது..
பாஜக எந்த அளவுக்கு தொகுதிகளில் தாராளத்தை காட்டுமோ அதே அளவுக்கு எடப்பாடி தரப்பிலும் தாராளத்தை இறக்க தயாராகிவிட்டார்களாம். அந்தவகையில், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எப்படியும் பாஜக போட்டியிடக்கூடும் என்பதால், இந்த தொகுதிகளிலெல்லாம் அதிமுகவின் குறி விழுந்துள்ளதாம்..
வாக்கு சதவீதம்: மொத்தத்தில், மாநில தலைமைக்கு அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு, பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது என்பதை மேலிட பாஜகவுக்கு நிரூபிக்க வேண்டும் + அதிமுகவின் வாக்கு சதவீதம் எந்தவிதத்திலும் கொங்குவில் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற 2 விதமான அசைன்மென்ட்கள் கொங்கு புள்ளிகளிடம் தரப்பட்டுள்ளதாம்.
அதைவிட முக்கியமாக, திமுகவுக்கு போட்டி பாஜக என்பதை போல மாயையை உருவாக்கிவிட்டுள்ளதால், அதையும் உடைக்க வேண்டும் என்ற உத்தரவு பறந்துள்ளதாம். ஓபனாக சொல்லப்போனால், திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, கொங்கு மண்டலத்தில் மட்டும் பாஜக வென்றுவிடக்கூடாது, மிக மிக குறைவான வாக்கு வங்கியை பெற வேண்டும் என்பதே அதிமுக மேலிடத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளதாம்.
பாஜகவின் அமைதி: அதேசமயம், கூட்டணி முறிவுக்கு பிறகு, பாஜக அமைதியாக உள்ளது. ஒருவேளை 5 மாநில தேர்தல் என்பதால், டிசம்பர் மாதம் வரை, கூட்டணி குறித்த பேச்சை, மேலிட பாஜக எடுக்காமல் இருக்கலாம் என்கிறார்கள்.
எனினும், பாஜகவின் இந்த அமைதி, அதிமுகவுக்கே லேசான குழப்பத்தை தந்துவருகிறதாம். ஒருவேளை, அதிமுக தரப்பில் ரெய்டுகள் ஏவப்படுமா? இரட்டை இலை முடக்கப்படுமா? பழைய வழக்குகள் தூசி தட்டப்படுமா? ஆட்களை இழுக்கும் முயற்சி நடக்குமா? என்றெல்லாம் தெரியாமல் லேசான கலக்கத்தில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு, மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் இது தொடர்பாக தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
"அரசியல் என்பது அச்சத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்காது.. அது நொடிக்கு நொடி மாறக்கூடியது.. சிபிஐ, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றையெல்லாம் வைத்து, எந்த அரசியல் கட்சிகளையும் முடக்கிவிட முடியாது. வேண்டுமானால், அந்த கட்சியிலிருக்கும் ஒன்றிரண்டுபேரை "அமுக்கி" வைக்கலாம்.
4 அமைச்சர்கள்: இப்போது ஆம் ஆத்மி கட்சியில்கூட, 2 பேரை உள்ளே தூக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அந்த கட்சி அழிந்துவிட்டதா என்ன? பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் இன்னும் உறுதியாகி இருக்கிறார்களே.. செந்தில்பாலாஜியை கைது செய்தார்கள்.. பிறகு பொன்முடியை நெருக்கினார்கள், ஆனால் விட்டுவிட்டார்கள்.. இப்போது மேலும் 4 திமுக அமைச்சர்களுக்கு நெருக்கடி என்கிறார்கள்.. இதனால் எல்லாம் திமுகவை அழித்துவிட முடியுமா என்ன?
செந்தில்பாலாஜி விஷயத்தில் இருந்த வீர்யம், அதற்கடுத்த அமைச்சர்களின் விஷயத்தில் இல்லையே ஏன்? ஒட்டுமொத்த அமைச்சரவையையும் தூக்கி புழலில் வைத்தாலும்சரி, பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் திமுக உறுதியாக இருக்கும். ஏனென்றால், அது வாக்கு வங்கி சம்பந்தப்பட்டது.
துணிச்சல் எடப்பாடி: எந்த காலத்திலும் காங்கிரஸை கழட்டிவிட மாட்டார்கள், பாஜக எதிர்ப்பிலும் உறுதியாக இருப்பார்கள்... அதிமுகவிலும் இப்படித்தான்... எல்லாமே ஒரு அளவுக்குதான்.. அந்த அளவை அதிமுகவில் தாண்டி சென்றுவிட்டார்கள்... எனவே, விசாரணை அமைப்புகளை வைத்து, ஒரு கட்சியையே முடக்கி விடமுடியாது. அந்தவகையில், கூட்டணி விஷயத்தில், எடப்பாடி பழனிசாமி துணிச்சலாகவே முடிவெடுத்திருக்கிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications