அசையுது "கோட்டை".. செந்தில் பாலாஜி இலாகா பறிப்பா? "அந்த" துறை போகிறதா? வெலவெலத்துப்போன 3 அமைச்சர்கள்
சென்னை: பல்வேறு தர்மசங்கடங்கள் சூழ்ந்துவரும் நிலையில், செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றப்படலாம் என்கிறார்கள்.. இதுகுறித்து பிரத்யேக செய்தி, நமக்கு கிடைத்துள்ளது.. என்ன நடக்கிறது திமுகவில்?
சமீபத்தில், அமைச்சர் நாசரின் பதவி பறிக்கப்பட்டது. சில இலாக்காக்களும் மாற்றப்பட்டன.. எனினும், இன்னொரு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, சமீபத்தில் 3 முக்கியமான துறைகளில் நடந்த கசப்பான சம்பவங்கள், திமுக அரசுக்கு தலைவலியை தந்துள்ளதாக தெரிகிறது..
மரக்காணம்: கள்ளச்சாராய விவகாரம், திமுக மீதான இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு போய்விட்டதாம்.. அதனால், மாவட்ட அமைச்சரான செஞ்சி மஸ்தான் மீதான அதிருப்திகளும் வலுத்து வருவதாக சொல்கிறார்கள். இதைத்தவிர, போக்குவரத்து துறையில் திடீர் ஸ்டிரைக்குகள் நடந்ததும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு திணறடித்ததும், அரசுக்கு சங்கடத்தை தந்துவிட்டதாக தெரிகிறது.
தற்சமயம் போராட்டம் இல்லை என்றாலும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. அதேபோல, ஆவின் பாலுக்கு தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.. முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்து வருகிறது. அதேபோல, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகளிலும் சர்ச்சைகளும், அதிருப்திகளும் வெடித்து உள்ளன.
ரிப்போர்ட்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், செந்தில்பாலாஜி விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்து வருகிறதாம். முதல்வர் கைக்கு, குறிப்பிட்ட மாத இடைவெளியில் துறை ரீதியான ரிப்போர்ட்கள் செல்வது வழக்கம்... அந்தவகையில், தமிழக அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டும் முதல்வர் கைக்கு சென்றுள்ளதாம்.. இதில்தான் சில துறைகளின் மீது புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. உளவுத்துறை தரும் இந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்தே, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்கிறார்கள்.
அந்தவகையில், முதல்வர் வெளிநாட்டுக்கு சென்ற தினத்தன்று நடந்த மோசமான சம்பவங்களில் மிக முக்கியமானது இந்த கரூர் ஐடி ரெய்டு... ஆனால், செந்தில் பாலாஜியை நேரடியாக குறி வைத்து இந்த ரெய்டு நடத்தப்படவில்லை என்றாலும், அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகப்பெரிய தலைவலியாக அரசுக்கு மாறிவிட்டது..
டோஸ் விட்ட ஸ்டாலின்: வெளிநாட்டில் இருந்தாலும்கூட, வருமானவரித்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளரிடமும், டிஜிபியிடமும் உடனடியாக ஆலோசித்தாராம்.. திமுக உள்ளிட்ட யாராக இருந்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, வருமானவரித்துறையினர் கோரிக்கை வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்குக்கு எந்த குந்தகமும் வந்து விடக்கூடாது என்றும் சற்று காட்டமாகவே அப்போது வலியுறுத்தினாராம் முதல்வர் ஸ்டாலின். பிறகு, செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு "செம டோஸ்" தந்ததாகவும் தெரிகிறது..
குந்தகம்: இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆர்.எஸ். பாரதியிடமும் முதல்வர் விவாதிக்க, இறுதியாக, பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் தந்திருந்தார் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி..!!
மற்றொருபக்கம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இது எரிச்சலை தந்துள்ளது.. செந்தில்பாலாஜியை தொடர்புகொண்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு பங்கம் வந்துவிடப்போகிறது என்று அழுத்தமாகவே சொன்னாராம்.. ஆனால், இவ்வளவு செய்தும்கூட, தேசிய அளவில் இந்த வவிகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது திமுகவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது..
டாஸ்மாக்: அதுமட்டுமின்றி காவல்துறை மீதும் விமர்சனம் எழுந்து சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கும் வழி வகுத்துவிட்டது.. இதனால் தேசிய படையினரின் பாதுகாப்புடன் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது... டாஸ்மாக் 10 ரூபாய் வசூல் விவகாரம்தான், செந்தில் பாலாஜியின் ஐடி ரெய்டுக்கு ஆளானதாக சொல்கிறார்கள்.. மற்றொருபுறம் செந்தில் பாலாஜிக்கு எதிராக சீனியர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியிடம் இருக்கும் "டாஸ்மாக்" இலாகாவை எடுத்துவிடலாமா? என்ற யோசனை திமுக மேலிடத்துக்கு வந்துள்ளதாம்.
டாஸ்மாக் மட்டும் எடுக்கலாமா? அல்லது மின்சாரத்தையும் சேர்த்து தூக்கிடலாமா? என்று விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.. ஒருவேளை இலாகா மாற்றப்பட்டால் டாஸ்மாக்கை கைப்பற்ற நேருவும், மின்சாரத்தை கைப்பற்ற ஐ பெரியசாமியும் கடும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்களாம்..
லிஸ்ட் போட்டி: ஒருவேளை மின்சாரம் மாற்றப்படவில்லையென்றால், டாஸ்மாக் தனக்குதான் வேண்டும் என்று ஐ பெரியசாமி , ஸ்டாலினிடம் இப்பவே மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளாராம்.. மாற்றம் வரும்போது, செந்தில்பாலாஜிக்கு கதர் கைத்தறி துறையை ஒதுக்குங்கள் என்றும் சிலர் முதல்வருக்கு அழுத்தம் தந்து வருகிறார்களாம்..
மாற்றத்தில் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டால், தன்னுடைய மகனை அமைச்சராக்க வேண்டும் என்றும் கெஞ்சுகிறாராம் ஐ.பெரியசாமி... இதை நேரடியாகவே முதல்வர் தரப்பில் சொல்லி வருகிறாராம்..
"தன் மகனை அமைச்சராக்குங்கள், நான் வேண்டுமானால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுகிறேன் என்றும் ஆப்ஷனை தந்துள்ளாராம் ஐ பெரியசாமி.. ஆனால், இதில் முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், எப்படி பார்த்தாலும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் இருக்கவே செய்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications