"வாரி சுருட்டிய" எடப்பாடி பழனிசாமி.. டக்குன்னு ஒரே நாளில் மாறுதே.. என்னவா இருக்கும்.. அப்போ ஓபிஎஸ்
சென்னை: சின்னமும், கட்சியும் அதிமுகவுக்கு சொந்தமாகி உள்ளது.. அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்து இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் இன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளதால், எதற்காக இந்த கூட்டம் என்ற கேள்வியும் கிளம்பி உள்ளது.
அதிமுக பொதுக்குழுவின் சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்திலும் பதிவேற்றிவிட்டது.. அதிமுகவின் முழுமையான சட்ட விதிகள் வெப்சைட்டிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.

சட்டவிதிகள்: இப்படி தேர்தல் ஆணைய வெப்சைட்டில், அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... அத்துடன் இரட்டை இலை சின்னமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதமானது, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடக்கப்போவதாக சொல்லி உள்ளனர்.. அதிமுக உச்சக்கட்ட குஷியிலும், நிம்மதியிலும் உள்ள நிலையில், இன்றைய கூட்டம் எதற்காக நடத்தப்போகிறார்கள் என்ற யூகங்கள் பறந்து வருகின்றன.
தேர்தல் ஆணையம்: அதிமுக இனி தங்களுக்கு மட்டுமே என்பதை பறைசாற்றும் விதமாக இந்த கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளதாக சொல்கிறார்கள்.. இத்தனை நாளும் நிலவி வந்த குழப்பங்கள், சட்டசிக்கல்கள் தீர்ந்துள்ளதாலும், தேர்தல் ஆணையமே அங்கீகரித்துவிட்ட நிலையில், இனி எந்தவித பூசலும் கட்சிக்குள் ஏற்பட வாய்பில்லை.. அதனால், இனியாவது, மாவட்டங்களில் முழுமையான களப்பணியில் இறங்க வேண்டும் என்பது குறித்த அறிவுரையை எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கக்கூடும் என்று தெரிகிறது.
விரைவில் எம்பி தேர்தல் உள்ளதால், அதற்கான பணிகளில் மா.செ.க்கள் இறங்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிகிறது.. காரணம். கூட்டணி இப்போது உறுதியாகிவிட்டாலும், பாஜக கடந்த ஒரு வருட காலமாகவே, தொகுதிகளை குறிவைத்து தேர்தல் வேலையை துவங்கிவிட்டது. தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் என்னென்ன என்பதை லிஸ்ட் எடுத்து, மொத்தம் 10 தொகுதிகளில் முழுமூச்சாக பணியில் ஈடுபட்டும் வருகிறது.. ஆனால், அதிமுகவில், ஒற்றை தலைமை விவகாரத்தினால் அப்படி இறங்க முடியவில்லை என்பதால், அதற்கான அட்வைஸ்கள் இனி தரப்படும் என தெரிகிறது.
மண்ணை கவ்விய கொங்கு: அதேபோல, எதிர்பாராத தோல்வி கொங்குவில் இடைத்தேர்தலில் கிடைத்துவிட்டது.. டெல்டாவிலோ, வைத்திலிங்கத்தின் செல்வாக்கை குறைத்து, அதிமுக பலத்தை கூட்ட வேண்டி உள்ளது.. தென்மண்டலங்களிலோ, டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இருவரின் சமூக வாக்குகளை உடைக்க வேண்டி உள்ளது.. எனவே, அதிமுகவில் அந்தந்த மாவட்ட மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அசைன்மென்ட்கள் தரப்படும் என்று தெரிகிறது.
அதேபோல, மதுரையில் அதிமுகவின் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன்மூலம், தென்சமூக மக்களின் அதிருப்திகளை எல்லாம் ஆதரவாக மாற்ற முயலலாம் என்றும் தெரிகிறது.. எனவே, மாநாட்டை எங்கு நடத்துவது, என்பது என்பது உட்பட, அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகள், பூத் கமிட்டி வேலைகள், இவைகளை பற்றியெல்லாம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? அதிமுகவில் இனி எந்த அடிப்படையில் உரிமை கோரப்போகிறார்? என்பது மிகப்பெரிய கேள்வியாக நிலவுகிறது..
கதவடைப்பு: அனைத்து கதவுகளுமே அதிமுகவில் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், அவருக்கு 2 அதே சாய்ஸ்கள்தான் உள்ளன.. ஒன்று தனிக்கட்சி துவங்குவது அல்லது அமமுகவில் இணைவது.. மக்களை சந்திக்க போகிறோம் என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லி உள்ள நிலையில், பக்கபலமாக ஓபிஎஸ்ஸூக்கு இப்போதுள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு எப்படி ஓபிஎஸ் டீம் நகர போகிறது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications