பீஸ் பீஸா உடையுது.. "பிரபலம்' வர்றாங்களாம்.. "சிங்கிள் கல்லில் டபுள் மாங்கா".. பலே எடப்பாடி பழனிசாமி
சென்னை: விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக படு வேகமாக களமிறங்கி விட்டது. இதை மற்ற கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே, பாஜக சீட் விவகாரங்கள் குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டுமாம்.. மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டுமாம்.. தங்களுக்கு ஒதுக்கப்படும் அந்த 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்களாம்.. இப்படி ஒரு டீலிங்கை அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தியிருக்கிறது..

20 - 20 சாத்தியமா: தங்களுக்கு ஒதுக்கப்படும், அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும், மீதமுள்ள 7 தொகுதிகளை தங்களது கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க பாஜக முடிவு செய்திருக்கிறது.
அந்த 7 தொகுதிகள் யார் யாருக்கு தெரியுமா? ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், தேமுதிக பிரேமலதா போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டதாம்.
தாமரை சின்னம்: அதுமட்டுமல்ல, இதில், ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள், அதாவது ஓபிஎஸ் + அவரது மகன் ரவீந்திரநாத் என 2 சீட்களை தந்து, இவர்கள் 2 பேரையுமே தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கலாம் என்று கூறியதாம் பாஜக தரப்பு..
இதையெல்லாம் கேட்டு, எடப்பாடி பழனிசாமி, அப்படியே அதிர்ந்து போய்விட்டாராம்.. இதற்கு பிறகுதான் கூட்டணி முறிவு என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியிருந்தது.
10 தொகுதிகள்: எனினும் பாஜக தன்னுடைய முடிவில் இப்போதுவரை உறுதியாக உள்ளதாகவே தெரிகிறது. காரணம் இந்த நிமிடம்வரை, எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தவும் இல்லை, கூட்டணிக்கான முயற்சியையும் தொடரவில்லை, அதிமுகவை விமர்சிக்கவும் இல்லை.. அதேசமயம், 10 தொகுதிகளில் வென்று, திமுக, அதிமுகவுக்கு ஷாக் கொடுக்கவும் முயன்று வருகிறது.
பாஜகவின் இந்த வியூகத்தைதான், எடப்பாடி பழனிசாமி முறியடிக்க முற்பட்டுள்ளாராம்.. அதிமுகவின் பலமே கொங்கு மண்டலம் என்கிறபோது, அந்த கொங்குவை, பாஜகவுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மேலும், அண்ணாமலையின் சொந்த தொகுதி என்பதால், கொங்குவில் பாஜகவை மோசமான தோல்வியை தழுவச்செய்யும் அளவுக்கு, வியூகங்களை முடுக்கிவிட்டிருக்கிறாராம்.
யாரந்த பிரபலம்: மற்றொருபுறம் தென்மண்டலத்தில் பாஜக காலூன்றி வருவதால், அங்கேயும் செக் வைக்க கள வேலைகள் நடக்கிறதாம். குறிப்பாக, ஓபிஎஸ் மகனுக்கு எதிராக ஒரு பிரபலமான பெண் வேட்பாளரை களமிறக்க போகிறாராம். இவர், தமிழகம் முழுக்க பிரபலமானவர் என்றும் சொல்கிறார்கள்..
அதேபோல, பாஜக எங்கெல்லாம் வலுவான வேட்பாளரை நிறுத்துகிறதோ, அந்த தொகுதிகளில் எல்லாமே, "பலம் + பிரபலம்" என டபுள் முகங்களை வேட்பாளராக இறக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
தேர்தல் என்றாலே, தொகுதிகளில் பாஜகவின் தாராளங்கள் அதிகமாகவே புழங்கப்படுவது வழக்கம்.. அந்தவகையில், இந்த முறையும் அதே தாராளங்கள் சிதறவிடும் திட்டம் இருப்பதால், இதையும் எடப்பாடி பழனிசாமி நொறுக்க திட்டமிட்டுள்ளாராம். எனவே, அந்தவகையில், தேர்தல் செலவுகளில், கரிசனங்கள் அதிகரிக்கலாம் என்கிறார்கள்..
சிறுபான்மையினர்: இதற்கு நடுவில், திமுகவையும் டேமேஜ் செய்து, திமுகவின் சிறுபான்மை ஓட்டு வங்கியை உடைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமிஇறங்கி உள்ளார். கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்களிடம் 2 விஷயங்களை வலியுறுத்தினாராம்..
ஒன்று, பாஜகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி இல்லை, மற்றொன்று, சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது அதிமுக மட்டுமே என்ற இந்த 2 விஷயங்களையும் அவரவர் தொகுதியில் அழுத்தமாக வலியுறுத்தும்படி அறிவுறுத்தினாராம்.
இதுபோக, சிறுபான்மையினர் ஆதரவை பெற வேண்டும் என்ற முனைப்புடன்தான், விரைவில் சுற்றுப்பயணத்தையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள போகிறாராம்..குறிப்பாக, இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிக பிரமாண்டமான மாநாடு நடத்த போகிறார்களாம். இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க அழைக்க போகிறார்களாம்.. அப்போது இஸ்லாமியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுக்கள்: அதேபோல, தமிழ்நாடு ஐக்கிய கிறிஸ்தவ கழகத்தின் சார்பிலும், கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார்கள். வருகிற 28-ந் தேதி கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் மாநாட்டிற்கு வரப்போவதாக சொல்லி உள்ளாராம்.
இப்படி நாலாபக்கமும் எடப்பாடி பழனிசாமியின் வியூகங்கள் விரிவடைந்து வருவதை, திமுக, பாஜக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா தரப்பு என மொத்த பேரும் உற்று கவனித்து வருகின்றனர்.. இதில், அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications