"நொறுங்கிடுச்சே".. பாஜகவின் கனவு கோட்டையில் ஓட்டை?.. மெயின் ரோலில் டிடிவி தினகரன்.. அப்ப எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற ஆர்வம் எழுந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைக்க நேரிடும் என்று அனுமானங்கள் உள்ள நிலையில், வேறு மாதிரியான கூட்டணி தகவலும் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

பாஜக + பாமக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரையும் ஒன்றிணைக்கலாம் என்ற முடிவுடன் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணிக்கு முயற்சிப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், எடப்பாடியை இணைத்தே அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க பாஜக முனைப்பு காட்ட நினைக்கிறது.. ஒருவேளை ஓபிஎஸ் இணைப்புக்கு, எடப்பாடி பழனிசாமி சம்மதிக்காத பட்சத்தில் ஓபிஎஸ், + சசிகலாவுடன் டிடிவி தினகரனின் அமமுகவையும் இணைத்து களம் காண பாஜக கணக்கு போடவும் தயங்காது என்கிறார்கள்.

 சசி ப்ளான்

சசி ப்ளான்

இதில் டிடிவியை பொறுத்தவரை, திமுகவை தலைதூக்க விடக்கூடாது என்பதிலும், திமுகவுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார் என்றும் அறிவித்துவிட்டார்.. மேலும், பாஜக மேலிடத்தின் நம்பிக்கை பார்வையும் தினகரன் மீது விழுந்துள்ளதால், இந்த முறை அமைய போகும் கூட்டணியில் டிடிவி தினகரன், தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்கிறார்கள்.. அதனால்தான் சமீபகாலமாகவே, தினகரன் பேச்சும், பாஜக விவகாரங்களை சப்போர்ட் செய்தே வெளிப்பட்டு வருவதை காண முடிகிறது.

 லாஸ்ட் டைம்

லாஸ்ட் டைம்

பாஜகவை பொறுத்தவரை, அமமுகவின் வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்புவதைவிட, அதிமுகவின் வாக்கு வங்கியை சிந்தாமல், சிதறாமல் அள்ளவே, அதிக கவனம் செலுத்தி வருகிறது.. காரணம், தினகரன் பிரித்த வாக்குகள் பெருமளவு அதிமுகவின் வாக்குகளே என்பதால்தான், பாஜக தினகரனுக்கு குறி வைத்து வருகிறது.. கடந்த தேர்தலின்போது, தினகரனை கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சி நடந்து அது கடைசி நேரத்தில் முடியாமல் போய்விட்ட நிலையில், இந்த முறை கூட்டணி வாய்ப்பு சாத்தியம் என்கிறார்கள்.. கடந்த சட்டமன்ற தேர்தலில், அமமுகவை எடப்பாடி அரவணைக்காத பட்சத்தில், தினகரன் தனித்து நின்ற வாக்கு சதவீதமும் பாஜகவை திரும்பி பார்க்க வைத்தது.

 எதிரும் புதிரும்

எதிரும் புதிரும்

இந்த முறையும் எடப்பாடி, தினகரனை கூட்டணிக்குள் சேர்க்காவிட்டால், ஓட்டுக்கள் ஒருபக்கம் பிரிவதுடன், ஓபிஎஸ்ஸும் தென்மண்டலத்தில் வாக்குகளை பிரித்துவிடுவார் என்ற கலக்கமும் பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது.. மேலும், வரும் தேர்தலில், தென்மண்டலங்களில், பாஜக காலூன்ற வேண்டும் என்பதால்தான், ஆபரேஷன் சவுத் என்ற வியூகத்தை கையில் எடுத்து வருகிறது.. இதற்கு டிடிவி தினகரனின் ஆதரவும் பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது என்கிறார்கள். அந்தவகையில், தினகரனை பாஜகவும், பாஜகவை தினகரனும் கைவிட வாய்ப்பில்லை என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன.

 பரமபதம்

பரமபதம்

ஆனால், டிடிவியுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவையா? என்ற இன்னொரு கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.. எம்பி தேர்தலின்போது, எஸ்பிடிஐ உடன் மட்டுமே அன்று அமமுக கூட்டணி வைத்திருந்தது.. ஆனால், கடந்த முறை தேமுதிகவையும் தன்னுடன் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தது.. இதில், கடந்த 2019-ல் கிட்டத்தட்ட 23 லட்சம் வரை அமமுக வாக்குகளை பெற்றது.. ஆனால், 2021-ல் கூட்டணியுடன் சேர்த்து, 13 லட்சத்து அளவுக்குதான் அமமுக வாக்குகளை பெற்றுள்ளது..

 டவுட் பாஜக

டவுட் பாஜக

அதாவது கூட்டணியை விரிவுபடுத்தியும்கூட, வாக்குகளில் சுருங்கிவிட்டது அமமுக.. எனவே, அமமுகடன் கூட்டணி தேவையா? என்றும் சிலர், பாஜகவின் காதை கடித்து கொண்டிருக்கிறார்களாம். எனினும், அதிமுகவுக்கு பலம் என்று சொல்லக்கூடிய இரட்டை இலையை மீறிதான், தினகரனால் 2019 தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய முடிந்தது என்பதால், பாஜக இந்த விஷயத்தில் யோசித்தே முடிவெடுக்கும் என்கிறார்கள்... மேலும் இந்த முறை தென்தமிழகத்தில் பாஜகவின் குறி பாய்ந்துள்ளது.

 டாப் 10

டாப் 10

குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்கள், கோவை, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்கள் என 25 மக்களவை தொகுதிகளை குறிவைக்க திட்டமிட்டுள்ளனர்... இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சார வியூகம், சந்திப்புகள் என பெரிய லிஸ்ட்டையே போட்டு வைத்துள்ளதாகவும்.. ஒரு டீமை இறக்கி, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் களநிலவரத்தையும் பாஜக தயாராக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். தென்மண்டலம் என்றால், அச்சமூகத்தின் ஆதரவாக ஓபிஎஸ் மட்டுமே போதுமே, டிடிவியையும் அதே தென்மண்டலத்துக்குள் கொண்டு வந்தால், அது மீண்டும் ஒரு அதிகார சிக்கலை உண்டாக்கிவிடும் என்றும் சிலர் காதை கடித்து வருகிறார்களாம்.. அந்தவகையில், தினகரன் பாஜகவில் கூட்டணி வைக்க போகிறாரா? இல்லையா? எடப்பாடி தினகரனை ஏற்றுக்கொள்வாரா? இல்லையா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+