செய்தியாளர்களை மரியாதையாக நடத்த சொல்லிவிட்டு.. மறுநாளே "குரங்கு" என்று திட்டிய அண்ணாமலை - வீடியோ
சென்னை: மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள், என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தீபாவளி டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்ட சில செய்தியாளர்களையும், செய்தி நிறுவனங்களையும் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்து இருந்தார். தீபாவளி வருமானம் குறித்து அமைச்சரவைக்கே முழுமையாக தகவல் வராத நிலையில் நீங்கள் எப்படி செய்தி போடலாம்.
பொய்யான செய்தி வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார்.

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் இப்படி பேசியதை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். நேற்று முதல்நாள் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, டாஸ்மாக் வருமானம் பற்றி பேசிய 3 பத்திரிகையாளர்களை சாராய அமைச்சர் மிரட்டுகிறார். கோவை குண்டுவெடிப்பு பற்றி பேசாத அவர் பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார். நாங்கள் சும்மா விட மாட்டோம் என்று மிரட்டுகிறார். அதில் பெண் செய்தியாளர்களும் இருக்கிறார்கள். சாராயம் விற்று பிழைப்பு நடத்தும் உங்களுக்கே இவ்வளவு இருக்கிறது.

அண்ணாமலை
மாத சம்பளம் வாங்கி.. பைக்கில் வந்து.. செய்தி சேகரித்து.. நேர்மையாக வாழ்க்கை நடத்தும் செய்தியாளர்களுக்கு எவ்வளவு இருக்கும். அவர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும். பத்திரிக்கையாளர்களை இப்படி நடத்த கூடாது என்று அண்ணாமலை விமர்சனம் வைத்தார். இது தொடர்பாக அண்ணாமலை செய்த ட்விட்டில், கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.

குரங்கு
இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? என்று அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார்.

விமர்சனம்
செந்தில் பாலாஜியை அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்த நிலையில், தற்போது அண்ணாமலையே செய்தியாளர்ளை குரங்கு என்று திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள் பேட்டி எடுக்க அருகில் வந்த போது, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள், என்று அண்ணாமலை கோபமாக கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களை பார்த்து மிகவும் கோபமாக அண்ணாமலை இப்படி பேசினார்.

அண்ணாமலை விமர்சனம்
அதை தொடர்ந்து பேசிய அண்ணாமலை.. நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க இங்கிருந்து என்று அண்ணாமலை கோபமாக கத்தினார். அண்ணாமலை இப்படி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

செந்தில் பாலாஜி
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து உள்ள ட்விட்டில், ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி செய்தியாளர்களை தவறாக பேசிவிட்டதாக அண்ணாமலைதான் விமர்சனம் செய்து இருந்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications