சொகுசு வீடு வாங்குகிறீர்களா? கையெழுத்து போடும் முன் மனசுல வச்சுக்க வேண்டிய முக்கியமான பாயிண்ட்
சென்னை: நாட்டில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்த போதிலும், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், அஹமதாபாத், புனே, கொல்கத்தா என இந்தியா முழுவதுமே சொகுசு வீட்டுத் தேவை அதிகரித்து வருகிறது. படித்த முதல் தலைமுறை பட்டதாரிகளிடையே வருமானம் அதிகரிப்பு மற்றும் அவர்கள் விரும்பும ஆடம்பர தேவைகள் தான் காரணம்.
ஐடி, கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் முதல் தலைமுறை பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், குடியிருக்க விரும்பும் இடம் முக்கியமான நகரின் முக்கிய பகுதிகளில இருக்க வேண்டும். மால், ரயில் நிலையம், விமான நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள் பேருந்து நிலையம் என எல்லாமே அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதேபோல் அதிக சம்பளம் அல்லது வருமானம் பெறும் முதல்முறை நடுத்தர மக்கள் மற்றும் உயர் வருவாய் உடைய மக்கள் ஒரு பணக்கார வீட்டில் உள்ள அல்லது பகுதிகளில் உள்ள அனைத்து உயர்ரக வசதிகளும் இருந்தால் அதிகம் விரும்புகிறார்கள்.
உதாரணமாக நீச்சல் குளம், ஜிம், காவலாளி, பூங்கா, 24 மணி நேரமும் ஜெனரேட்டர் வசதி, கிளப், மிக அழகான ஸ்டைலிஷான வீட்டு கட்டமைப்புகள், கார் பார்க்கிங்,யோகா சென்டர், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட மிகச்சிறந்தத உள் கட்டமைப்புகள், முற்றிலும் அதிக வசதி உடைய மக்கள் மட்டுமே வாங்க கூடிய அளவிற்கான நிலத்தின் மதிப்பு ((ரிவேல்யூ அதிகமாக இருக்க வேண்டும்) அப்படியான விஷயங்களை மக்கள் விரும்புகிறார்கள்.
அதேநேரத்தில் வாங்கும் வீட்டை முறையாக பராமரிக்க கட்டிக்கொடுத்தவர்களே தயாராக இருக் வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற நிதி ஆதாரங்கள் அவர்களிடம் இருப்பதால் கோடிகளை கொட்டி கொடுத்த அப்பார்ட்மெண்ட் அல்லது தனி சொகுசு வீடுகள் வாங்க விரும்புகிறார்கள். அவர்களின் ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்ய ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தயாராக உள்ளன.
இந்நிலையில் சொகுசு வீடுவாங்க விரும்பும் மக்கள், வாங்க போகும் இடம், வீட்டை கட்டி தரும் டெவலப்பரின் சாதனைகள் மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் சரியான முறையில் குறித்த நேரத்தில் சொல்கின்ற எல்லாவற்றையும் செய்து தருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே சொகு வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டியவைகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சரியான இடம்: நீங்கள் ஆடம்பரமான சொகுசு வீட்டை வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதற்காக முதலீடு செய்யும் பணம் நியாயமானதாக இருக்கும். அதற்கு நீங்கள் முதலீடு செய்யும் இடம் மிக முக்கியமானதாக பகுதியாக இருக்க வேண்டும். அதாவது மிகவும் மதிப்பு மிக்க இடமாகஇருக்க வேண்டும். அந்த இடத்தின் ரியல் எஸ்டேட் வேல்யூ அதிகமாக இருக்க வேண்டும். அதாவது மக்கள் நீ நான் என்று போட்டி போடக்கூடிய அளவிற்கு முக்கியமான இடமாக இருக்க வேண்டும். ஊருக்கு வெளியில் காட்டுக்குள் அல்லது தண்ணீர் தேங்கும் இடமாக இருக்கக்கூடாது. சொத்தின் மதிப்பு பின்னாளில் அதிகரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மால், ரயில் நிலையம், விமான நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள் பேருந்து நிலையம் என எல்லாமே அருகில் இருக்க வேண்டும். அது தான் உங்களின் வாழ்க்கை தரம் செழிப்பாக இருக்க உதவும்.
ரியல் எஸ்டேட் நிறுவனம் : அடுத்ததாக நீங்கள் பணத்தை செலுத்த போகும் ரியல் எஸ்டேட் நிறுவனம் அதாவது கட்டுமான நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகவும். நம்பகாமானதாக இருக்க வேண்டும். வீடு கட்டிக்கொடுப்பதில் நீண்ட அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பல சொகுசு குடியிருப்புகளை கட்டி, அதனை சிறப்பாக பராமரித்து வருபவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுவும் எப்படி கட்டுமானத்தின் தரம், காலக்கெடுவைக் கடைப்பிடிப்பது மற்றும் சரியான ஒழுங்குமுறை தரத்தை கடைபிடிக்கும் நிறுவனமாக கட்டுமான நிறுவனம் இருக்க வேண்டும். அந்த டெவலப்பருக்கு அதாவது கட்டுமான நிறுவனத்திற்கு சமூகத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும். ஏனெனில் சில கட்டுமான நிறுவனங்கள் அதை செய்கிறோம். இதை செய்து தருகிறோம் என கவர்ச்சி வாக்குறுதிகளை வீசி நம்ப வைத்து ஏமாற்றுகின்றன. சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும். அதுபோல் இல்லாமல் சரியாக, ஏமாற்றாமல் செயல்படக்கூடிய தொழில்முறை நிறுவனமாக இருக்க வேண்டும்.
சொகுசு வசதிகள் : அடுத்ததாக நீங்கள் வாங்கும் வீட்டில் சொன்னபடி வசதிகளை செய்து கொடுக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். ஸ்பா, நீச்சல் குளம், தனித்தனி கார்பார்க்கிங். விளையாட்டு வசதிகள், அற்புதமான வசதிகளுடன் பூங்கா, உயர்ரக கட்டுமானங்கள், வீட்டில் ஏசி, கதவு, ஜன்னல் என எல்லாவற்றிலும் ஆடம்பர வசதிகள், என விஐபிக்கான அனைத்து வசதிகளும் சரியான முறையில் செய்து தருவது குறித்து எழுத்துப்பூர்வ ஆவணமும், பின்னால் அதனை செய்து தரும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும். இந்த வசதிகளுக்காகவே நீங்கள் சொகுசு வீடுகள் வாங்குகிறீர்கள் எனவே இந்த வசதிகளை கண்டிப்பாக பார்த்து பார்த்து வாங்க வேண்டும். அப்போது தான் உங்கள் வீடு உங்களுக்கான வெற்றியின் அடையாளமாக இருக்கும். உங்களுக்கான சிறந்த சரணாலயமாகவும் இருக்கும். எனவே வீடு எப்படி கட்டப்படுகிறது. என்னென்ன வசதிகள் என்பதில் கவனமாக இருங்கள். பின்னாடி முடியாது என்று கூறிவிடக்கூடாது.
பத்திர ஆவணங்கள் மற்றும் அனுமதி: அடுத்ததாக ஆடம்பரமான கவர்ச்சியான வீடுகள் வாங்கும் போது கோடிகளை செலவு செய்ய வேண்டியதிருக்கும். அப்படியான நிலையில், வீடுகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். வீட்டின பத்திரத்தில் எந்த வில்லங்கமும் வரக்கூடாது. வீடு அல்லது நிலம் பிரச்சனை இல்லாத சரியான இடமாக இருக்க வேண்டும். அதேபோல் தண்ணீர் தேங்காத மெயின்ரோட்டில் எளிதாக போக்குவரத்துக்கு உகந்த இடமாக இருக்க வேண்டும். மேலும் சொகுசு வசதிகளுடன் அடுக்குமாடி கட்டுகிறார்கள் என்றால், அதற்காக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) கீழ், அத்தியாவசியமான விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்கள் பதிவு செய்திருக்கிறர்களா என்பதை சரிபார்ப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
ஒழுங்குமுறை: அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 8 மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 10 மாடி கட்டுவது. கார் பார்க்கிங் வசதிகள் சொன்னபடி செய்யாமல் மாற்றி செய்வது. அனுமதி வாங்காமல் கட்டிவிட்டு பின்னர் அனுமதிக்கா அலைவது போன்றவை இருக்கவே கூடாது. அதேபோல் மிக முக்கியமான விஷயம். நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வகையில் அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
கவர்ச்சி வாக்குறுதி: ஆடம்பரமான சொகுசு வீடுகளை வாங்க விரும்பும் மக்கள் மேற்கண்ட விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பர் சொல்கிறார் என்று ஆசைப்பட்டோ அல்லது கவர்ச்சி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை நம்பியோ போகவே கூடாது. குறைவான விலையில் ஏராளமான வசதிகள் என்ற வாசகத்தை நம்பக்கூடாது. சரியான இடம், தரமான கட்டிடம், மிகச்சிறப்பான ஆடம்பர வசதிகள், நிலையான உத்தரவாதம், நம்பிக்கையான நிறுவனம், ரியல் எஸ்டேட் சம்பந்தமான அரசின் அனைத்து அனுமதிகள் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே சொகுசு வீடு உங்கள் கனவு இல்லமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications