சுடுதண்ணீ அண்டாவில் உட்கார்ந்திருப்பது போல் இருக்கா? ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா?
சென்னை: கடுமையான வெயிலா? உடல் முழுவதும் வேர்த்து ஊத்துகிறதா? 24 மணி நேரமும் நீர் வீழ்ச்சியில் இருக்க வேண்டும் என தோன்றுகிறதா? ஆன் செய்த ஏசியை ஆஃப் செய்ய மனமில்லையா?
ஆமாம்ப்பா ஆமாம்வா! அப்போ இந்த தகவல்கள் உங்களுக்குத்தான். நன்றாக படியுங்கள். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தகிக்கிறது. இதனால் உடல் அப்படியே தந்தூரி மெஷினில் இருப்பது போன்று ஒரு ஃபீலிங் இருக்கிறது.

அடிக்கும் வெயிலுக்கு முட்டை மட்டும் ஆம்லெட்டாகவில்லை. கோழியும் ரோஸ்ட்டாகிறது. பீகாரில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயிலாம். அப்போ எத்தனை வெப்பம் இருக்கும் என்பதை பாருங்கள். இது போன்ற வெப்பத்தை தணிக்க உடல் சூட்டை தணிக்க இயற்கை பானங்களை அருந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது டீ, காபியை தவிர்த்துவிட்டு மோர், லஸி, இளநீர், பழச்சாறுகள் (பாக்கெட்டட் ஐட்டம் இல்லை), பழத்துண்டுகளை சாப்பிட வேண்டும். இதற்கான கடைகள் சாலையில் முளைத்திருக்கின்றன. இது தவிர உடல் உஷ்ணத்தை போக்கும் யோகாசனங்களை செய்யுமாறும் யோகா மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முக்கியமான வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் தண்ணீருடன் செல்வது நல்லது. தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீரை குடிக்க வேண்டும். மரத்தடி நிழலில் இளைபாறுதல் செய்ய வேண்டும். இப்படி இயற்கையான முறையில் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.
அதைவிட்டுவிட்டு செயற்கையான விஷயங்களை செய்தால் அந்த நேரத்தில் ஆறுதல் கொடுக்குமே தவிர அதனால் பக்க விளைவுகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது இந்தியாவின் மொத்த பரப்பளவில் 90 சதவீதத்துக்கும் மேலான இடங்கள் அதீத வெப்பத்தால் தகிக்கின்றன. இதனால் மக்கள் தங்களை குளிர வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளை கையாளுகிறார்கள்.
வெப்ப அலைகளுக்கு அஞ்சும் மக்கள் அதை தணிக்க குளிர்ந்த நீரை பருகுகிறார்கள். அதாவது ஃப்ரிட்ஜில் வைத்த நீரை குடிக்கிறார்கள். ஷவரை திறந்து ஜில்லென்ற தண்ணீரில் குளிக்கிறார்கள். எந்த நேரமும் ஏசியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். எதற்காகவும் நான்- ஏசி அறைக்கோ, ஹாலுக்கோ வருவதில்லை. இதெல்லாம் அந்த நேரத்திற்கு இதமாக இருக்கும்.
ஆனால் இது போன்ற பழக்கங்கள் உடலுக்கு கெடுதல் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஜில்லென்ற தண்ணீரில் குளித்தால் புத்துணர்ச்சி போல் இருக்கும். ஆனால் அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய துடிப்பும் அதிகரிக்கும். நுரையீரல் விகிதமும் அதிகமாகும். இதனால் உடல் எடையும் குறையும். எப்போதும் குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது வேறு, வெயிலின் தாக்கத்தை போக்க குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது வேறு.
வழக்கமாக குளிர்ந்த நீரில் குளித்தால் அவர்களுடைய சர்குலேட்டரி சிஸ்டம் சீராக இருக்கும். எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர்ந்த நீரால் குளிக்கும் பயனை 30 வினாடிகள் முதல் 2 நிமிடங்களில் நாம் அறியலாம். ஆனால் யார் யார் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் இருக்கிறது.
நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்கள், இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிப்பது நல்லது. இதனால் உடலின் வெப்ப அளவு குறையும். உங்களை சோர்வடையாமல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும். அளவுக்கு அதிகமாகவும் குளிர்ந்த நீரை குடித்தாலும் தோலுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும்.
வெரிகோஸ் வெயின் நோய் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் நரம்புகளை தளர்த்த அது உதவலாம். குளிர்ந்த நீரோ, வெந்நீரோ, சாதாரண தண்ணீரோ எது உங்களுக்கு விருப்பமோ அதை குடியுங்கள். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வெப்பம் அதிகமாக இருக்கும் போது அதிக உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும். அது ஓட்ட பயிற்சி, விளையாடுதல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அதிகாலை வேளை, மாலை வேளைகளில் இது போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இல்லாவிட்டால் உடலில் நீர்ச்சத்து இழந்து அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications