நீங்கள் சோழிங்கநல்லூரா இல்லை பல்லாவரமா? மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் கோட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து பயன்பெறுங்கள் என மின்சார வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து டான்ஜெட்கோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அறிவிப்பு📢 #சென்னை-யில் 24.07.2024 (புதன்கிழமை) காலை 10.30 மணி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம் கோட்டம்: செயற் பொறியாளர் / இயக்கம் & பராமரிப்பு / பல்லாவரம் அலுவலகம், 110 கி.வோ, பல்லாவரம் துணை மின் நிலையம், ஆபிசர்ஸ் லேன் பல்லாவரம், சென்னை 43 பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று பயனடைவீர். இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இந்த குறைதீர் கூட்டத்தில் மின்வாரிய உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே உங்கள் பகுதியில் மின் தொடர்பான புகார்களை அவர்களிடம் பதிவு செய்யலாம். மாதந்தோறும் பகுதி வாரியாக இந்த குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இதில் அறிவிக்கப்படாத மின் தடை, மின் இணைப்பு கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட புகார்களை சொல்லலாம்.
அது போல் மின் தடை நேரத்தில் ஊழியர்களின் செயல்பாடு, 24 மணி நேர மின் சேவை மையத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி என எதுவாக இருந்தாலும் புகார் அளிக்கலாம். அது போல் எங்காவது மின் வயர்கள் ஆபத்தான முறையில் இருந்தாலும் சரி, அதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டாலும் சரி அது குறித்து புகார் அளிக்கலாம்.
பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை என்றால் முன் கூட்டியே அறிவிக்கப்படுகிறதா, இல்லையா என்பது குறித்தும் உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். எந்த மின் கம்பமோ, டிரான்ஸ்பார்மோ பழுதாகியிருந்தாலோ சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தாலோ அதுகுறித்தும் புகார் அளிக்கலாம்.
ஏற்கெனவே ஆன்லைன் வாயிலாக நிறைய புகார்களை தமிழ்நாடு மின்சார வாரியம் சரி செய்து வருகிறது. யாரெல்லாம் தங்கள் வீடுகளில் பவர் கட் இல்லை, அறிவிக்கப்படாத மின்தடை என அறிவிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் டான்ஜெட்கோ பதில் அளிக்கிறது.
ஒரு சில நேரங்களில் டிவிட்டர்வாசிகள் மரியாதை இல்லாமல் பேசினால் அந்த ட்வீட்டை அப்படியே சைபர் கிரைம், காவல் துறைக்கும் டேக் செய்து விடுகிறது. இப்படி டான்ஜெட்கோ இணையத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறது. அத்துடன் மழை நேரத்தில் மின் விபத்துகளில் இருந்து காத்து கொள்வது எப்படி போன்ற தகவல்களையும் கொடுக்கிறது.












Click it and Unblock the Notifications