தீபாவளிக்கு ஷாப்பிங் போறீங்களா? சென்னையில் நடந்த திடீர் மாற்றம்! ரொம்ப கவனமாக இருங்க.. முக்கியம்
சென்னை: தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன., சென்னைக்கு மக்கள் பலர் வருவார்கள் என்பதால் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுக்க தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

அதேபோல் இந்த முறையும் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் விடப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பயணம்; இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சென்னையை நோக்கியும் மக்கள் பலர் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். முக்கியமாக சென்னையில் பொருட்கள் வாங்க, துணிகள் வாங்க பலர் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.
சென்னையில் துணி எடுக்க.. முக்கியமாக தி நகரில் பர்சேஸ் செய்ய மக்கள் பலர் வரிசையில் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக தி நகர் பகுதிகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தீபாவளி கூட்டம்: தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. சென்னைக்கு மக்கள் பலர் வருவார்கள் என்பதால் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
தீபாவளி நெருங்கி வருவதால், நகரின் வணிக மையங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 18,000 பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம், மலர் பஜார் ஆகிய இடங்களில் போலீசார் 17 கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளனர்.
கூட்டத்தை கண்காணிக்க தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டையில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ட்ரோன் போலீஸ் படை பிரிவை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். 3.80 கோடி மதிப்பில் இந்த போலீஸ் படை பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே இந்த படை தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னை அடையாறில் சிக்னல் அருகே இந்த படை பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக தலைமை காவல் நிலையம் அங்கு கட்டுப்பட்டு உள்ளது. தற்போது அந்த காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த படையும் தற்போது தீபாவளி பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் முதல் கட்டமாக 9 ட்ரோன்களையும் அதன்பின் நூற்றக்கணக்கான ட்ரோன்களையும் களமிறக்க உள்ளனர். சென்னையில் பறக்கவிட்டு மக்களை கண்காணிக்க உள்ளனர். சில ட்ரோன் இதில் 9 கிலோ மீட்டர் வரையிலும் சில அதைவிட அதிகம் தூரம் செல்ல கூடிய திறனும் கொண்டதாக இருக்கும். இந்த ட்ரோன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும். போலீசாருக்கு உதவியாக இருக்க முடியும். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் எளிதாக துப்பு துலக்க முடியும்.
இது போக கூட்டம் நிகழ்ச்சிகள், மெரினா போன்ற இடங்களில் மக்களை கண்காணிக்க முடியும். ஒரு இடத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் கணக்கிட முடியும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும். டிராபிக் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். பைக் மூலம் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும். போலீஸாரின் வேலையை இந்த ட்ரோன் எளிமையாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications