பொங்கலுக்கு சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா.. தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு சூப்பர் டிரிக்ஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் இன்று இரவே ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று முதலே ரயில்களில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிறு என்பதால், பலரும் நாளை வேலை முடிந்ததும் கிளம்ப ஆயத்தமாகி வருகிறார்கள். பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆறு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள், பலரும் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஆனால் ரயிலில் செல்ல ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

தற்போதைய நிலையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு பகல் 1 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. இதே ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில் மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது.
தாம்பரம் -நாகர்கோவில் இடையே மற்றொரு சிறப்பு அதிவிரைவு ரயில் சனிக்கிழமை செல்கிறது. சனிக்கிழமை இரவு 11.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த சிறப்பு ரயில் மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 12.05 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது.
சென்னை சென்ட்ரல்- மதுரை இடையே இயக்கப்படும் மற்றொரு சிறப்பு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட உள்ளது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சாமல்பட்டி, பொம்முடி, கோவை, பொள்ளாச்சி, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. மறு மார்க்கத்தில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில், வரும் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கிய நிலையில் சிலநிமிடங்களில் முடிந்துவிட்டது.
தற்போதைய நிலையில் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்வது தான் ரயிலில் செல்ல ஒரே வழியாக உள்ளது. தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை பெரும்பாலும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடிவது இல்லை.. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, சிலர் யுக்திகளை கையாண்டு பாருங்கள். உங்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக டிக்கெட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்றாலும் , சில முயற்சிகள் செய்தால் தட்கல் டிக்கெட் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதன்படி, தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர், ஏற்கனவே மாஸ்டர் லிஸ்டை (பயணிக லிஸ்டை) ஐஆர்சிடிசி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதுபொதுவாக கடைசிநேரத்தில் லாக் இன் செய்தால் சைட் ஓபனே ஆவது இல்லை.. எனவே 10.50க்கு மேல் 10..55க்குள் முயற்சி செய்தால் தான் ஓபன் ஆகிறது. அதேநேரம் குறிப்பிட்ட அளவு நேரமே லாக்இன்னில் இருக்க முடியும் என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
10.57க்கு மேல் பொங்கல் பண்டிகை காலங்களில் ஐஆர்சிடிசி தளம் 11.10 வரை ஓபனே ஆவது இல்லை. ஒருவேளை இந்த சிக்கலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை என்றால், பேமெண்ட் ஆப்சனில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பெரும்பாலான பேமெண்ட் ஆஃப்சன்கள் ஒர்க் ஆகாமல் எரர் என்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழலில் ஐஆர்சிடிசி வாலட்டில் டிக்கெட்டுக்கு உரிய பணம் இருந்தால் புக்கிங் எளிதாக முடிய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் ஐஆர்சிடிசி பே லேட்டர் ஆப்சன்களும் எளிதாக ஒர்க் ஆக வாய்ப்பு உள்ளது. வாலட்டுகளில் பணம் இருந்தால் தான் நேரத்தை மிச்சப்படுத்தி புக்கிங் செய்ய முடியும். கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ ஐடி பதிவு செய்து பணம் செலுத்தவது சவாலானதாக இருக்கும். எனவே வாலட்டில் பணம் வைப்பதை உறுதி செய்யுங்கள். அந்த வாலட், ஐஆர்சிடியில் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். இதை உறுதி செய்தாலே ஓரளவு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்துவிடலாம்.
அடுத்ததாக ரெஃப்ரெஷ் செய்வதோ, சில விஷயங்களை இருமுறை செய்வது போன்ற தவறுகளை செய்யாமல் சரியாக செய்தால் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் 10.57க்குள் ஐஆர்சிடிசி இணைய தளத்திற்குள் சென்று, ரயில் விவரங்களை சர்ச் செய்து ஓபன் செய்து, எந்த ரயிலோ அதன் அருகில் தயார் நிலையில் இருந்தால் ஓரளவு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அதிக டிக்கெட் உள்ள ரயில்களை முயற்சிப்பது ஓரளவு சாத்தியமாக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications