ரொம்ப கவனம்! சென்னையில் எந்த ரயில் நிலையத்திற்காவது போறீங்களா? உடனே இதை படிங்க!
சென்னை: சென்னையில் உள்ள ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் திடீரென போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.
பழ வியாபாரம் செய்துவரும் ராஜேஸ்வரி என்ற பெண் நேற்று முதல்நாள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார். கடற்கரை- தாம்பரம் ரயிலில் பயணம் செய்து வந்த நேற்று இரவு பணி முடித்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதே ரயிலில் ராஜேஸ்வரியுடன் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவரை நெருக்கமாக கண்காணித்து உள்ளார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி இறங்கும் நேரம் பார்த்து நொடியில் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளார். அதோடு இல்லாமல் ரயில் எடுக்கும்வரை அவரை கத்தியால் வெட்டிய அந்த இளைஞர் அதே ரயிலில் அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு ராஜேஸ்வரி மிதந்து உள்ளார். இதையடுத்தே ரயில்வே போலீசார் உடனே அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆஜர்படுத்தினர். நேற்று இரவு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இரவு முழுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயங்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு ரத்த போக்கும் அதிகமாக இருந்தது. அதேபோல் அவரின் உடல் உறுப்புகள் பல வெட்டப்பட்டு இருந்ததால் அவசர ஆபரேஷனும் செய்யப்பட்டது. ஆனால் ரத்து போக்கு, உறுப்புகள் சேதம் காரணமாக அவர் மரணம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின் காதல் அல்லது பண விவகாரம் காரணமாக இருக்கலாமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு: இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் திடீரென போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி ரயில்வே போலீசார், பாதுகாப்பு படைக்கான மத்திய போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ரயிலிலும் சிலர் பாதுகாப்பிற்காக பயணம் செய்கிறார்கள். சைதாப்பேட்டையில் நடந்த கொலைக்கான காரணம் தெரியாத காரணத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரயில்வே நிலையத்திற்குள் செல்லும் எல்லா பயணிகளும் இதனால் முறையாக சோதனை செய்யப்பட்டு அதன்பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
நுங்கம்பாக்கம்: கடந்த 2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காலையில் மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. ஒருதலைக் காதல் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதை பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையை செய்ததாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சியில் நீல கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தது இவர்தான் என்று கூறி செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ராம் குமார் கைது செய்யப்பட்டார். போலீசார் இவரை கைது செய்யும் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
இவர் அப்போது கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டதாக போலீசார் தரப்பு தெரிவித்தது. இதனால் ராம் குமார் ஒருவார்த்தை கூட பொதுவில் பேசவில்லை. அதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம் குமார் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறைச்சாலையில் 2016 செப்டம்பர் மாதம் 17ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications