உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க போறீங்களா.. கல்வித்துறையின் இந்த முக்கியமான உத்தரவை பாருங்க!
சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை எமிஸ் என்று அழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்ற அடையாளச்சான்றிதழை பதிவு செய்து பராமரிப்பது அவசியமாகும். வேறுபள்ளிகளில் சேர எமிஸ் சான்றிதழ் மிகவும் முக்கியமாகும்.
ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளியில் சேருவதற்கு மாற்றுச்சான்றிதழ் எனப்படும் டிசி வழங்கப்படும். இப்போது எப்படி என்றால் அவர் எந்த பள்ளியில் படித்தாலும் எமிஸ் என்ற சான்றிதழ் பள்ளி கல்வி துறையில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் இந்த சான்றிதழ் அவசியம் ஆகும். மாணவர்களுக்கு என்று ஒரு நம்பர் வழங்கப்படும். இந்த எமிஸ் சான்றிதுழை பள்ளிகள் தான் டவுன்லோடு செய்ய முடியும்.

இந்த சான்றிதழை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்தவகையில் எமிஸ் அடையாளச்சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை கல்வித்துறை வகுத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
யு.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் அடையாளச்சான்றிதழ் உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் உறுதிசெய்த பின்னரே புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் வழங்கவேண்டும்.
எமிஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து பெற்றோருக்கு வழங்க வேண்டும். அதனை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோர் தொலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அதன் மூலமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும்.
2-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பள்ளி மாற்றம் செய்து சேரும்போது அவர்களுக்கு புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
மாணவர்களுடைய பள்ளியின் விவரம் மற்றும் எமிஸ் அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications