வருமான வரி ITR தாக்கல் செய்ய போறீங்களா? உங்களுக்கு இந்த டவுட் எல்லாம் இருக்கா? அப்போ இதை படிங்க!
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடங்கி உள்ளது. இன்னும் பலருக்கு ITR விண்டோ திறக்கவில்லை என்றாலும் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இப்படிப்பட்ட நேரத்தில் பின்வரும் சந்தேகங்கள் இருந்தால் அதை இங்கே நிவர்த்தி செய்கிறோம்.

1. பழைய முறை வருமான வரி என்றால் என்ன?
இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2. புதிய முறை வருமான வரி என்றால் என்ன?
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
3. 12 லட்சம் ரூபாய் வரை புதிய regime ல் வரி இல்லை என்றால் ஸ்லாப் ஏன் 4 லட்சத்தில் இருந்து துவங்குகிறது?
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
4. புதிய வரி regime ல் முதலீடுகளை காரணம் காட்டி விலக்கு பெற முடியுமா?
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது
5. பழைய முறையில் முதலீடுகளை காரணம் காட்டி சலுகைகளை பெற முடியுமா?
நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
6. இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர். இதை சோதனை செய்கின்றனர்.
7. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலக்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
8. வீட்டு வாடகைக்கு டிடிஎஸ் கட்ட வேண்டுமா?
வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார். பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை. இதனால் சிறிய வீடுகளில் வாடகை விடுபவர்கள்.. குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுபவர்கள் பயன் அடைவார்கள். அதோடு பலர் புதிதாக வாடகைக்கு வீடு விடவும் வழிவகுக்கும். வாடகை வீடுகளின் எண்ணிக்கை இதனால் உயரும். நேற்று பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
9. ஒருவேளை நீங்கள் 80C ஐ முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், மேலும் வருமான வரி விலக்குகளை பெற விரும்பினால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் விலக்கு விருப்பத்தைப் பெற NPSக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் முதலீடு செய்வது.
10. முதலீடுகள், வீட்டு லோன் இருந்தால் எந்த முறை பெஸ்ட்;
உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
11.ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்வது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரீபண்ட் சென்றுவிடும்.
12. முதலாவதாக, வருமான வரி ரிட்டர்ன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications