ஆம்னி பஸ்ஸில் போக போறீங்களா.. இன்று முதல் சென்னையில் அடியோடு மாறுது... சிஎம்டிஏ முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையின் புறநகர் புதிய பேருந்து முனையமான கிளாம்பாக்கம் இன்று திறக்கப்படும் நிலையில், எஸ்இடிசி மட்டுமல்ல, ஆம்னி பேருந்துகளும் இனி கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என சிஎம்டிஏ அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. கோயம்பேடு போல் இல்லாமல், பேருந்துகளை நெரிசல் இன்றி நிறுத்தவும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டது. சூர்ய கதிர்கள் உதயம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 130 அரசு பஸ்கள், 85 தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வசதியாக 3 ஆயிரத்து 500 மாநகர பேருந்துகள் செல்ல மேற்கூரையுடன் கூடிய நடைமேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் தரைத் தளம், முதல் தளத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும் 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
இந்த பேருந்து நிலையத்தில் 100 கடைகள், 4 உணவகங்கள், துரித உணவகங்கள் பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். அறைகள், 540 கழிப்பறைகள், கண்டக்டர்கள், டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் என பல்வேறு வசதிகள் உள்ளன. 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது..
பேருந்து நிலையத்தின் உள்ளே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயருடன் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
சென்னையின் புதிய பேருந்து முனையமான கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார். இன்று முதல் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் வருகிறது.
SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட… pic.twitter.com/dDSu0V503Y
— CMDA Chennai (@CMDA_Official) December 30, 2023
இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மக்கள் பயணிக்க முடியும். இந்த பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ இன்று வெளியிட்ட அறிவிப்பில். "SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு செல்லும் வகையில் பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது.
SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும். " என்று கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications