பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யூபிஐ யூஸ் பண்றீங்களா.. சென்னை ஐகோர்ட் உத்தரவு உங்களுக்கு வரம்
சென்னை : பேடிஎம் கணக்கை முடக்கி பணம் திருடப்பட்ட வழக்கில் ரூ.3 லட்சத்தை மருத்துவ மாணவிக்கு 2 வாரங்களுக்குள் வழங்க 'பேடிஎம்' நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யூபிஐ யூஸ் பண்றவங்களுக்கு வரமாக பார்க்கப்படுகிறது.
அதெப்படி வரமாகும்.. சென்னை உயர்நீதிமன்றம் ஏன் இப்படி உத்தரவிட்டது. என்பதை அறியும் முன்பு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் முதுகலை மாணவி பவித்ரா. இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த கணக்கின் மூலம் 'பேடிஎம்' கணக்கும் தொடங்கியிருந்தார்.
அவருக்கு கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வங்கி கணக்கில் வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு தொகையாக ரூ.3 லட்சம் மர்ம நபர்களால் கணக்கை முடக்கி திருடப்பட்டது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பவித்ரா புகார் செய்தார். ஆனால், பணத்தை திருப்பித் தர வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது, வங்கிக்கணக்கில் இருந்து இந்த பணம் திருடப்படவில்லை என்றும் 'பேடிஎம்' கணக்கு வாயிலாக இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால், 'பேடிஎம்' நிர்வாகம் தரப்பில், இந்த திருட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது. பண பரிவர்த்தனை தொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனை பாதுகாப்பானது என்று வாதிட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல தவணையாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த உத்தம்குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்ராம் குமார் ஆகியோரது வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, "மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர். அதேநேரம், அதில் ஏதாவது மோசடி நடந்தால், அதற்கு பொறுப்பு ஏற்க எந்த நிறுவனமும் முன்வருவது இல்லை. அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் செய்கின்றனர். இந்த வழக்கில், 'பேடிஎம்' கணக்கு வாயிலாகத்தான் மனுதாரர் பணம் எடுக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு 2 வாரங்களுக்குள் அந்த பணத்தை கொடுக்க 'பேடிஎம்' நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு யூபிஐ ஆப் யூஸ் பண்றவங்களுக்கு நிச்சயம் வரமாகும். எப்படி என்றால், இனி கூகுள் பே, போன் பே, பேடிஎம், பாரத் பே, இப்போ பே, என எந்த யூபிஐ பயன்படுத்தினாலும், அதன் மூலம் யாராவது ஆன்லைன் மூலம் உங்கள் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திருடினால் அந்த நிறுவனங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டியதிருக்கும். அதேநேரம் தீர்ப்பு காரணமாக வங்கிகளும், யூபிஐ ஆப் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்க அதிக வசதிகளை செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நிச்சயம் யூபிஐ பயனாளர்களுக்கு வரம் தான். அதேநேரம் வங்கி கணக்கிற்கு பாஸ்வேர்டு அம்சங்களை கவனமாக நாம் தான் கையாள வேண்டும். எந்த காரணம் கொண்டும் மற்றவர்கள் எளிதாக அறியும் வகையில் பாஸ்வேர்டுகளை வைக்கக்கூடாது. அதேபோல் ஒன்டைம் பாஸ்வேர்டுகளை கொடுத்துவிட்டு ஏமாறுவது அல்லது அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தேவையற்ற விஷயங்களை கிளிக் செய்வது போன்றவை ஆபத்தில் தான் முடியும். தவறான லிங்குகள் தினமும் வந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தெரியாமல் கிளிக் செய்தால் கூட பேராபத்தாக முடியும். எனவே இந்த விஷயத்தில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications