அன்வர் ராஜா Vs சி.வி.சண்முகம்! அதிமுக மா.செ கூட்டத்தில் வாக்கு வாதம்..! நடந்தது என்ன?
நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் செயல்படுவது, நிர்வாகிகள் மீதான வழக்குகள், அவைத்தலைவர் தேர்வு, சசிகலா செயல்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது, இதில் காரசார விவாதம் நடந்துள்ளது. கட்சித்தலைவர்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியை இழந்ததிலிருந்து இரட்டைத்தலைமை காரணமாக தொடர்ந்து உள்ளூர கோஷ்டி மோதல் இருந்துக்கொண்டே இருக்கிறது. மேலுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் ஒற்றுமை காட்டினாலும் மோதல் நடப்பது வெளிப்படையாக தெரிவதை காண முடிகிறது. அதிமுகவுக்குள் உள்ள பிரச்சினை போதாது என்று சசிகலாவின் என்ட்ரியும் ச்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் எதிரில் மாநில நிர்வாகிகளே மோதிக்கொண்டது நடந்துள்ளது. மாவட்டச் செயலாளர்கள் பேசும்போது அதிமுகவின் செயல்பாடு குறைந்து போனது, அதிமுக இடத்தில் பாஜக செயல்படுவதாக சொன்னது குறித்தும் காரசாரமாக பேசப்பட்டுள்ளது.

சசிகலா வருகை, கட்சிக்கொடியை அவர் பயன்படுத்துவது குறித்த தலைமையின் இயலாமையை கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தலில் கட்சி வெற்றிப்பெற்றது, கட்சிக்கு வெளியே நிர்வாகிகள் பேசுவது பேட்டி அளிப்பது குறித்தும் அன்வர்ராஜாவும், சிவி சண்முகமும் நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்ற அதிமுக முனைப்போடு செயல்படுவது குறித்து பேசப்பட்டது. தேர்தலுக்கான வியூகம் அமைப்பது, கூட்டணிக்கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெ தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று உள்ளனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவின் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளதால், அப்பதவிக்குத் தகுதியான நபரை தேர்வு செய்வது தொடர்பாக உள்ள சட்ட சிக்கல்கள் குறித்தும் தகுதியான நபரை ஒருமனதாக தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
டெல்லி புறப்பட்டார் விஜய்! நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?











Click it and Unblock the Notifications