சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில்.. திடீரென குவிந்த ஏபிவிபி மாணவிகள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில்.. திடீரென குவிந்த ஏபிவிபி மாணவிகள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்!

    அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    அரியலூர் மாணவி வழக்கு.. சிபிஐ தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.. பெற்றோருக்கு நோட்டீஸ்! அரியலூர் மாணவி வழக்கு.. சிபிஐ தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி.. பெற்றோருக்கு நோட்டீஸ்!

    வழக்கு

    வழக்கு

    இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் திரிவேதி ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் சிபிஐ அமைப்பிடம் போதுமான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏபிவிபி

    ஏபிவிபி

    மேலும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு ஒரு பக்கம் நடக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி ஆகும். இந்த அமைப்பு தொடர்ந்து அரியலூர் மாணவி விவகாரத்தில் போராடி வருகிறது.

    போராட்டம்

    போராட்டம்

    அரியலூர் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாகவும். பள்ளி நிர்வாகம் மத மாற்ற அழுத்தம் கொடுத்த காரணத்தால் அந்த மாணவி பலியானதாகவும் இந்த அமைப்பு கூறி போராட்டம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் மாணவியின் மரண வழக்கு சிபிஐக்கு சென்றதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திடீரென இன்று பிற்பகல் ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிப்பாதி ஆகியோர் போராட்டம் செய்தனர்.

    கோஷம்

    கோஷம்

    முதல்வர் வீட்டு முன் அமர்ந்த 3 ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவிகள் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். அதோடு அந்த மாணவி பெயரை கத்தி கோஷம் எழுப்பினர். திடீரென 3 பேர் இப்படி முதல்வர் வீடு முன் போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த பெண் போலீசார் மூன்று மாணவிகளையும் கைது செய்தனர். அவர்கள் வர மறுத்த நிலையில் குண்டுகட்டாக கட்டி அவர்களை தூக்கி சென்றனர்.

    English summary
    Ariyalur Student case: ABVP students protest against CM M K Stalin outside his residence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X