ஓவர் பேச்சு.. மாட்டிக் கொண்ட மதுரை ஆதீனம்.. போலீசுக்கு ஓடிய அர்ஜுன் சம்பத்.. என்னவாம்..?
மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என அர்ஜூன் சம்பத் கோருகிறார்
சென்னை: மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லையென்றால் மத்திய அரசை வலியுறுத்துவோம்" என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே, மதுரை ஆதினத்தின் பேச்சு பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.. அனைத்து பேச்சுக்களும், பேட்டிகளும் தமிழக அரசை தாக்கும் வகையிலேயே இருந்து வருகிறது..
மற்றொரு பக்கம், இந்து சமய அறநிலைத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு அதை ஆதினங்கள் மற்றும் மடங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

தக்கார்கள்
அதேபோல மதுரையில் நடந்த துறவிகள் மாநாட்டில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்களே? நாங்கள் பேசாமல் யார் பேசுவார்கள்.. கோவில்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? கோவில்களில் அரசியல்வாதிகள் நுழைந்து விட்டனர்.. பல கோவில்களில் அரசியல்வாதிகளே தக்கார்களாக உள்ளனர் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார்..

எச்சரிக்கை
இவரது இந்த பேச்சுக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து பொறுமையாக பதிலளித்தார். ஆனால் ஒருகட்டத்தில் எச்சரிக்க துவங்கினார்.. ஆதீனம் இப்படி அரசியல் பேசிவந்தாலோ, அவரின் இதுபோன்ற பேச்சு தொடர்ந்தால் இந்து சமய அறநிலைத்துறை அதை அனுமதிக்காது.. அவரின் இந்தப் பேச்சுக்கு பதில் சொல்ல பல வழிகள் இருக்கிறது என்று வார்னிங் தந்தார்.. ஆனாலும் ஆதீனம் அடுத்த லெவலுக்கு போய் நடிகர் விஜய்யை விமர்சித்தார்..

போஸ்டர்கள்
அவர் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று சொல்லி, விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார்.. இதையடுத்து, ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர். மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போட்டு இருக்கிற நீங்களெல்லாம் தளபதியை பற்றி பேசலாமா? என்று அச்சிட்டு ஒட்டி வருகின்றனர்.. இப்போது விஷயம் என்னவென்றால், ஆதீனத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு ஓடியுள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்..

வார்னிங்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அது தொடர்பாகவும் மனு கொடுத்தார். பிறகு செய்தியாளர்களிடம பேசும்போது சொன்னதாவது: மதுரை ஆதினம் அரசியல்வாதிகளாலும், நடிகர் விஜய்யின் ரசிகர்களாலும் மிரட்டப்பட்டு வருகிறார். அரசியல் வாதிகளை போல ஆதினம் நடந்து கொள்கிறார் என்று அமைச்சரே அவரை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆதினத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு கிடையாது..

அர்ஜூன் சம்பத்
ஆதீனத்தின் கருத்து அரசியல்வாதிகளுக்கும் நடிகர் விஜய்க்கு எதிரானது கிடையாது.. இதை விஜய் ரசிகர்களும் அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆதினத்திற்கு மிரட்டல் வருவதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாநில அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லையென்றால் மத்திய அரசை வலியுறுத்துவோம்" என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பட்டினப்பிரவேசம்
இப்படித்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின்போது, தனக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று ஆதீனம் சொல்லி இருந்தார்.. எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன், மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்" என்றும் தெரிவித்திருந்தார்.. அதன்படியே பிரதமர் சென்னை வந்தபோது, நேரிலேயே சென்று நடந்ததை சொல்லி பாதுகாப்பும் கேட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications