Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடாமல் எரியும் திருப்பரங்குன்றம்.. மலை மீது ஏற பாஜக எம்பிகளுக்கு அழைப்பு! பற்ற வைத்த அர்ஜுன் சம்பத்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தீக்குளித்த பூர்ணசந்திரனின் குடும்பத்தை, பாஜக நாடாளுமன்ற குழு அமைத்து சந்திக்க வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் வந்து ஆய்வு செய்ய வேண்டும், பூர்ண சந்திரன் குடும்பத்தினர் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் மத்திய பாஜகவுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரம் மற்றும் அங்குள்ள சுனைகள் ஒரு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்படுவதாகவும், கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் அக்கட்சியினர் திருப்பரங்குன்றம் கோவில் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், "இயேசு மதம், இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு 3000 ஆண்டுகளாக இருக்கக்கூடியது நம்முடைய திருப்பரங்குன்றம் முருகன் மலை.

Arjun Sampath BJP Thiruparankundram

திருப்பரங்குன்றம்

இது இடைக்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, அதுதான் சிக்கந்தர் தர்கா. லண்டன் நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. தர்கா, நெல்லி தோப்பு மட்டும் அவர்களுக்கு சொந்தம். மீதி உள்ளது முருகனுக்கு சொந்தம். இந்த பிரச்சனை மீண்டும் தமிழக முழுவதும் உள்ள முருக பக்தர்களிடம் கோபத்தையும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. மலை மீது 15க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளது. அதில் ஒரு தீர்த்தத்தை தர்கா தரப்பினர் ஆக்கிரமித்துள்ளார்கள்.

அர்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றத்தில் தலவிருட்சம் கல்லத்தி மரம், அதில் ஏன் பிறை கொடியை கட்டுகிறார்கள்?, இது சம்பந்தமாக இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளோம். சந்தனக்கூடு நிகழ்ச்சி பேச்சுவார்த்தைக்கு யாரையும் அழைக்கவில்லை. சமணர் கோவிலில் பச்சை பெயிண்ட் அடித்தார்கள், வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களது ஆக்கிரமிப்பு மலை மீது தொடர்கிறது. அதற்கு கோவில் நிர்வாகமும் அரசும் துணை போகிறது. இது சம்பந்தமாக முறையாக கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம், நீதிமன்றத்திற்கும் எடுத்துச் சொல்ல உள்ளோம்.

பூர்ண சந்திரன்

பரம்பரை பரம்பரையாக திமுக குடும்பத்தைச் சார்ந்தவர் பூர்ண சந்திரன். தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிரிழந்ததற்கு திமுகவில் இருந்து இரங்கல் செய்தியோ அஞ்சலியோ செலுத்தவில்லை. ஆட்சியர் அல்லது மந்திரி வரவில்லை உதவித்தொகை வழங்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் அரசு நிதி வழங்குகிறது. நீட் தேர்வு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் உதவித் தொகை கொடுக்கப்படுகிறது. பூர்ணச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் அன்றைக்கு காவல்துறை பேச்சுவார்த்தையின் போது நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். இன்னைய வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பாஜக எம்பி குழு

பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு ஒரு வேண்டுகோள், பாஜக நாடாளுமன்ற குழு அமைத்து பூர்ண சந்திரன் குடும்பத்தை சந்திக்க வேண்டும். திருப்பரங்குன்றம் வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வரை எங்களுடைய சட்ட போராட்டமும் மக்கள் போராட்டத்தையும் தொடர்வோம்.

ஸ்கந்தர் மலை

வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டோம், கோவில் இடிக்கப்படுகிறது, சேவ் பாலஸ்தீனம், சேவ் காசா என்றார்கள். இந்துக்கள் எரிக்கப்படுகிறார்கள், உங்களுடைய மனிதநேயம் எங்கே போனது?. ஸ்கந்தர் மலை என்று சொன்ன கம்யூனிஸ்ட் சண்முகம் சொன்னது நீதிமன்றம் அவமதிப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் வங்கதேசத்திற்காக ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+