வெற்றிக்கொடி கட்டு... 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த மனிதர்..!
வெற்றிக்கொடி கட்டு... 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த மனிதர்..!
சென்னை: ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழக காவல்துறையை சேர்ந்த நாகநாத பாண்டி தேர்வாகியுள்ளதை அடுத்து அவருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பெருநகர குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன், தடகள வீரர் நாகநாத பாண்டியை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் வெற்றிக் கொடிக்கட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள சென்னை பெருநகர காவலர் நாகநாத பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தமிழக காவல்துறைக்கே பெருமையான தருணம் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அர்ஜூன் சரவணன் ஐ.பி.எஸ். உயர்பதவியில் இருந்தாலும் கூட தன் துறையை சேர்ந்த இளநிலை காவலர் ஒருவர் சர்வதேச போட்டிக்கு தேர்வாகியிருப்பதால் பொதுவெளியிலேயே நாகநாத பாண்டியை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார் அர்ஜுன் சரவணன்.
ராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுளியம்பட்டியை சேர்ந்த நாகநாத பாண்டி மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது சென்னை பெருநகர காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஆடவருக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் இவர் பங்கேற்கவிருக்கிறார். இதனிடையே ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த ஐவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை அறிவித்திருக்கிறார்.
இதனிடையே அர்ஜுன் சரவணனை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் பலரும் நாகநாத பாண்டியை தொடர்பு கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லம் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications