ஆதவ் அர்ஜுனாவை பங்கம் செய்த அர்ஜுன மூர்த்தி.. ரஜினிகாந்த் குறித்து விஜய்க்கு பகிரங்க கடிதம்
சென்னை: அன்புள்ள விஜய் அவர்களுக்கு. தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் அவர்கள் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை கட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது என்று ரஜினிகாந்தின் முன்னாள் ஆலோசகராக இருந்த அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் ஒருபகுதியாக ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தவெக சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக தடுத்தது
அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது. அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார்.
ரஜினிக்கு மிரட்டல்
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்" என்று கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரஜினியை யாரும் மிரட்ட முடியாது என்று திமுக பதில் அளித்தது. அதேபோல் ரஜினிகாந்தின் முன்னாள் ஆலோசகராக இருந்த அர்ஜுன மூர்த்தி விஜய்க்கும் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அன்புள்ள விஜய்
அதில் அவர் கூறுகையில், "அன்புள்ள விஜய் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே. ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை.
ஆதவ் அர்ஜுன்
தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் அவர்கள் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அறைகுறை அரசியல் புரிதல்
ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அது அறிவு, அனுபவம் மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை கட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது; அது காலப்போக்கில் பெரிய அரசியல் சுமையாக மாறும்
துணிச்சலாக பேசுபவர்
அதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றால், அவரது செயல்பாடுகள் காரணமாக தொல்.திருமாவளவன் அவர்களின் கட்சி இருந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவு. அந்த அரசியல் சூழ்நிலைக்கு பின்னர் அவரை தங்கள் கட்சியில் சேரும் நிலைக்கு தள்ளியது என்பதை தமிழகம் முழுவதும் அறிந்ததே. குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும் பாசமும் பெற்றிருக்கும் நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது. அது தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுமே புண்படுத்தும். ரஜினிகாந்த் அரசியலில் அதிகாரம் பெற்றவர் அல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர்.
ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது
அவரது வாழ்க்கையில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன: ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் "ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று கூறி அரசியல் நிலையை சுட்டிக்காட்டினார். அந்த கருத்துக்காக அவர் பல விமர்சனங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். இருந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டிருந்தார்.
அரசியல் முதிர்ச்சி இல்லை
இந்தியாவிலும் உலக அரங்கிலும் பல தலைவர்களின் மரியாதையைப் பெற்றவர். அவரைப் போன்ற நபரை குறைத்து பேசுவதன் மூலம் யாரும் உயர்வதில்லை. மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் என்பது அரசியலின் அடிப்படை உண்மை. எனவே, தங்களின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை உடன் கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். இல்லையெனில், தமிழ் மக்களின் மனதில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும். தமிழக அரசியல் உயர வேண்டும் என்றால், பிரிவினை, இகழ்ச்சி மொழி அல்ல - பொறுப்பான அரசியல் மொழி தான் தேவை" இவ்வாறு அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
ரஜினி பற்றி ஆதவ் சொன்ன கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த தக் லைஃப் பதில்.. குவியும் கமெண்ட்ஸ் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட்














Click it and Unblock the Notifications