”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக அங்கீகாரம் தொடர்பாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்ததாக தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் எந்தவித லஞ்சமும் இன்றி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜூலை 1 முதல் தனியார் பள்ளிகளுக்கு புதுப்பித்தல், தொடர் அங்கீகாரம் வழங்குதல் ஆகியவை உள்பட தனியார் பள்ளிகளுக்கு தேவையான சர்ட்டிபிகேட் அனைத்தும் இணையவழியில் பெறும் முறை அறிமுகப்படுத்தப்படும். இதில் தனிநபர்களின் தலையீடு இருக்காது. இதற்கு கைமாறாக தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணத்தை இயன்ற அளவு குறைக்க வேண்டும்" என்று அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியிருந்தார்.

Private School Federation Thanks CM Vijay for Granting Recognition Without Bribes

அமைச்சர் ராஜ்மோகனின் இந்த அறிவிப்புக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் எந்தவித லஞ்சமும் இன்றி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தனியார் பள்ளி நிர்வாகிகள் மாவட்டம் தோறும், மாநிலம் தோறும் ஆங்காங்கே இடைத்தரகர்களை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து நாங்க பட்ட சித்ரவதைக்கு அளவே கிடையாது. அதிகாரிகள் கூட ரொம்ப அலைய வைத்துவிட்டார்கள். விஜய் பொறுப்பேற்ற பிறகு ஒரு மாதத்திற்குள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள். தமிழக பள்ளி, கல்வித்துறை வரலாற்றில் இந்த மாதிரி நடைபெற்று இருக்க கூடிய நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல்வர் விஜய்க்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்" என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரப் புதுப்பித்தல், தொடக்க அங்கீகாரம் பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்காக இதுவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இடைத்தரகர்கள் மூலம் பணம் கேட்கப்பட்டு வந்தது. அவ்வாறு பணம் செலுத்தாத பள்ளிகளின் கோப்புகள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டன.

அதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான அங்கீகாரம் பெற ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கேட்டு முகவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இத்தகைய சூழலில், தற்போது 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு எந்தவித கட்டணமும் பெறாமல், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் உரிமம் மற்றும் அங்கீகாரப் புதுப்பித்தல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தனியார் பள்ளிகள் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும். இந்த நடைமுறையை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தனியார் பள்ளிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை, கனிமவளவத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் முறைகேடுகளை தடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் பெற வேண்டிய என்.ஒ.சி சான்றிதழுக்கு கடந்த ஆட்சி காலங்களில் பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் பெற்றதாகவும் அதனை தற்போதைய ஆட்சியில் மாற்றியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார கடிதங்களை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:- தனியார் பள்ளிகளுக்கான புதுப்பித்தல் மற்றும் என்.ஒ.சி வழங்கும் நிகழ்ச்சி 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டு மொத்த செயல்முறைகளையும் வெளிப்படைத்தன்மையுடன் மாற்ற இனி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ், பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான புதுப்பித்தல் சான்றிதழ்களுக்கு வரும் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் முற்றிலும் தகுதி அடிப்படையில் இது வழங்கப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+