நெல்லை கொலை எதிரொலி.. அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி அதிரடி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் நீதிமன்றம் முன்பே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த கைதி மாயாண்டி என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். பழிக்கு பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். நீதிமன்றம் முன்பே இளைஞர் வெட்டி படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. நீதிமன்றங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இதேபோன்று வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர். இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைவிட கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், உயர் ரக, அதி நவீன துப்பாக்கிகள் கொடுக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாவட்ட எஸ்பி மற்றும் நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருக்கும் காவலர்கள் தொடர்ந்து காவல் பணியில் இருக்க வேண்டும்.
காலை முதல் நீதிமன்றம் முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வரும் 23 ஆம் தேதிக்குள் இது தொடர்பாக அந்தந்த மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications