ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா? காவல்துறை மனு - ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம்சாட்டியது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேருக்கு நவம்பர் 10ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கும் ஜாமீன் வழங்கக் கோரி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பொற்கொடிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், குற்றச்சாட்டு பதிவு தொடங்கியுள்ள நிலையில் பொற்கொடிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என ஆட்சேபணை தெரிவித்தார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி ஜாமீன் வழங்கக் கோரிய மனு, ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு ஆகியவற்றோடு காவல்துறை தாக்கல் செய்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறி டிசம்பர் 3 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications