திமுக நிர்வாகியின் மகன் அதிரடி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் அதிரடி.. யார் இந்த சதீஷ்?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக பெண் நிர்வாகியை தொடர்ந்து திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைதான நிலையில் சதீசுடன் சேர்த்து போலீசில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டர். ஜோமட்டோ உணவு டெலிவரி பாய்கள் போன்று உடை அணிந்து வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை வழக்கு தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் வரை கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் இறந்தார். இத்தகைய சூழலில் தான் இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய சூழலில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சதீஷின் தந்தை குமரேசன் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கு அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே 13 பேர் கைதான நிலையில் திமுகவின் நிர்வாகி மகன் சதீஷும் சிக்கியுள்ளார். இதனால் கைது எண்ணிக்கை என்பது 14 ஆக அதிகரித்துள்ளது.
இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள அருள் என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் மலர்கொடி மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சதீஷின் தந்தை குமரேசன் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கு அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே 13 பேர் கைதான நிலையில் திமுகவின் நிர்வாகி மகன் சதீசும் சிக்கியுள்ளார். இதனால் கைது எண்ணிக்கை என்பது 14 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர ஆம்ஸ்ட்ராங்கின் கொலை என்பது ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆற்காடு சுரேசுக்கு நெருக்கமான பாஜக நிர்வாகி அஞ்சலைக்கும் கொலையில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications