Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம்.. ஜெய்பீம்.. ஜெய்பீம்.. என முழங்கிய ஆதரவாளர்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் உள்ள உறவினரது இடத்தில் நள்ளிரவு 1. 15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெய்பீம்.. ஜெய்பீம்.. என அவரது ஆதரவாளர்கள் முழங்கினர்.

இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் தொடங்கிய நிலையில், அடக்கம் செய்யும் இடமான திருவள்ளூர் மாவட்டம் பொத்தூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு வந்தடைந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Armstrong BSP Chennai

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் கைது செய்து அடைக்கப்படுள்ளனர்.

மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யவும், அங்கு கல்லறை எழுப்பவும் அனுமதி கோரி மாநகராட்சியில் முறையிடப்பட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அது தொடர்பான ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. இன்று காலை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு வழக்கறிஞர், "தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது" என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு, "தேமுதிக அலுவலகம் பரந்த இடம், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருப்பது குடியிருப்பு பகுதி, சாலை குறுகலானது" என்று வாதிட்டது.

இதையடுத்து, நீதிபதி பவானி சுப்பராயன், சென்னை மாநகராட்சி பரிந்துரைத்த மூன்று மாற்று இடங்களில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம் என பரிந்துரைத்தார். அதோடு, அப்பகுதி குறுகிய சாலையுடன் கூடிய குடியிருப்பு பகுதியில் உள்ளதால், கட்சி அலுவலக வளாகத்திற்குள் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

கட்சி அலுவலக நிலத்தின் பரப்பளவு சுமார் 2,400 சதுர அடியில் மட்டுமே இருந்தது, அதில் ஒரு மேற்கட்டுமானம் ஏற்கனவே உள்ளது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள்" என்றார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி பவானி, கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்யலாம். பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலலகத்தில் மணி மண்டபம் கட்ட எந்த பிரச்சனையும் இல்லை, அரசு அனுமதியுடன் பெரம்பூர் கட்சி அலுவலுகத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும் நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார். மேலும் உடல் எடுத்துச் செல்லப்படும் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடியை அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ பொத்தூர் புறப்பட்டுள்ளது இறுதி ஊர்வல வாகனம் புறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யவுள்ளது. அந்த இடம் ஆம்ஸ்டிராங்கின் உறவினரான காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமான இடம். அங்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்ய கஞ்சனா தேவி அனுமதி கொடுத்ததின் பேரில் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மாலை முதல் செய்யப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில், நள்ளிரவு 12.10 மணியளவில் அடக்கம் செய்யும் இடமான திருவள்ளூர் மாவட்டம் பொத்தூருக்கு வந்தடைந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

நள்ளிரவு 1. 15 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெய்பீம்.. ஜெய்பீம்.. என அவரது ஆதரவாளர்கள் முழங்கினர். முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உறவினர்களும், அரசு அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்று ஏற்பாடுகளைச் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+