சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு

பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajiv Gandhi case: தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார்- வீடியோ

    சென்னை: "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல" என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் குமுறி உள்ளார்.

    7 தமிழர்களை விடுதலை செய்ய பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இது சம்பந்தமான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

    செம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரைசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை

    அற்புதம்மாள்

    அற்புதம்மாள்

    இதைதவிர, மகன் விடுதலை குறித்து மக்களிடம் நியாயம் கேட்டும் போராட்டம் செய்தார். தன் மகன் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள்

    ட்விட்டர் பதிவு

    இன்றோடு, பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29-ம் ஆண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அற்புதம்மாள் ட்விட்டரில் தனது மனக்குமுறலை கொட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது இதுதான்:

    நிரபராதி

    "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதி பேரறிவாளன். வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.

    குற்றவாளி

    161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்பு தந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டு சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம் நீதி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே. சட்டம், நீதிங்கறது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா? " என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Arpudhammals sentimental tweet about his son Perarivalans release and slams Identity politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X