Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு.. விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்காக இரவோடு இரவாக ஏற்பாடுகள் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Arrangements are in full swing at Theevu tidal where Vijayakanths body will be kept to last respect

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக, அதிகமானோர் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் உள்ளதன் காரணமாகவும், மேலும் ஏராளமானோர் விஜயகாந்த் உடலை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக வருகை தருவதன் காரணமாகவும், பாதுகாப்பு கருதி, சென்னை தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வைக்கப்படுகிறது.

விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் உடல் வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை அதிகாலையில் கோயம்பேட்டில் இருந்து விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+