யார் யாருக்கு அரியர் தேர்வு ரத்து பொருந்தும்? தமிழக அரசு சொல்வது என்ன!
சென்னை: கொரோனா காரணமாக எத்தனை ஆண்டு அரியர் வைத்திருந்தாலும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு, எம்சிஏ, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளை பொறுத்தவரை இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல ஜூலை 23ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக் கழக மானியக் குழு, தொழில் நுட்பக் கல்விக் குழுவின் வழிகாட்டுதலின் படி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பொருந்தும்
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து குறித்து இதுவரை இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி யாருக்கெல்லாம் தேர்வு ரத்து ஆகும்.

மற்ற பருவப்பாடங்களுக்கு பொருந்தும்
இறுதி பருவ தேர்வுக்கு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு தேர்வு ரத்து பொருந்தாது. இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற பருவப்பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மதிப்பெண் அளித்து தேர்ச்சி
ஏற்கனவே படித்து முடித்து சென்ற மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு தேர்வின்றி, யூ.ஜி.சி, வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு ரத்து
தொலைநிலைக்கல்வி மூலம் பயின்று அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக உயர் கல்வி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எத்தனை தாள் தேர்வு கட்டணம்
எத்தனை தாள்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதோ, அத்தனை தேர்வும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக யூ.ஜி.சி, வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்கப்படும். கலை அறிவியல், பொறியியலில் இளநிலை, முதுநிலை, பட்டயம், எம்சிஏ படிப்பை தற்சமயம் படிக்கும் மாணவர்களுக்கும், படித்து முடித்த மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.

விரிவான அரசாணை
மதிப்பெண் வழங்கும் முறை குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக உயர்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளளது. அரசின் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications