பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே.. கைது செய்! சென்னையை பரபரப்பாக்கிய பெரியாரிஸ்டுகளின் போஸ்டர்!
சென்னை: நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாள சீமானை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் பெரியாரிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். திராவிடர் பெரியார் கழகத்தின் பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை மாநகரின் பல பகுதிகளில் சீமானை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்:

தமிழ்நாடு அரசே! காவல்துறையே!
பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே!
உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி, வன்புணர்ந்து 7 முறை கருக்கலைப்பு செய்த பாலியல் குற்றவாளி சீமானை கடுமையான சட்டத்தில் கைது செய்! சிறையிலடை!
இவ்வாறு சென்னை மாநகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

நடிகை பலாத்கார வழக்கில் சீமான்
நடிகையை பலாத்காரம் செய்ததாக சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான், தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மேலும் சீமான் மீதான புகாரை விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீமானின் இழிவான விமர்சனம்
இதனைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசரணைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் 1.15 மணிநேரம் போலீசார் விசாரித்தனர். மேலும் தருமபுரி, சேலம், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தம் மீது புகார் தெரிவித்த நடிகை ஒரு பாலியல் தொழிலாளி.. விரும்பி வந்துதான் தம்முடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார். தம்மை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள மாதம் ரூ30,000 பணம் கேட்டவர் அந்த நடிகை; வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் செய்யவில்லை; அப்படி செய்திருந்தால்தான் பாலியல் வன்புணர்வு. என்னை நீதிமன்றமும் போலீசாரும் விசாரிக்கும் நிலையில் பாலியல் குற்றவாளி என ஏன் விமர்சிக்க வேண்டும் என்றெல்லாம் சீமான் பேசியிருந்தார். சீமானின் இத்தகைய இழிவான பேச்சுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் (சுவரொட்டிகள்) ஒட்டப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications