Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meera Mithun: 3 ஆண்டுகளாக தலைமறைவு! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான மீரா மிதுனின் பிடிவாரண்ட் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான பிடிவாரண்ட் திரும்ப பெறப்பட்டது. இதற்கு காவல் துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

மாடல் அழகி, பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் (34) பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதை அவரே வெளியிட்டிருந்தார். இது பார்த்த சமூக ஆர்வலர்கள், பட்டியலினத்தவர்களின் நலனுக்காக பாடுபடும் அரசியல் கட்சிகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

meera mithun chennai

இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீரா மிதுனையும், அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாமலேயே இருந்தார்.

இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளான நிலையில் அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இது குறித்து நீதிமன்றம் கேட்ட போது, "மீரா மிதுன் அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருகிறார். இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

அவரது மொபைல் போனும் சுவிட்ச் செய்யப்பட்டுள்ளது" என போலீஸார் விளக்கம் அளித்தனர். பிடிவாரன்ட் உத்தரவை நிறைவேற்றாததாக போலீஸாரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதனிடையே தன் மகளை கண்டுபிடித்து தரக் கோரி மீரா மிதுனின் தாய் ஷியாமளா, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மீரா மிதுனின் தாய் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் டெல்லி தெருக்களில் தன் மகள் சுற்றி வருவதாகவும் அவரை மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக, டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, "டெல்லி போலீஸார் உதவியுடன் டெல்லி சட்ட பணிகள் ஆணைக் குழுவால் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலம் தேறி பயணம் செய்ய தகுதியானவர் என மருத்துவர்கள் தெரிவித்தவுடன் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக" தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய மீரா மிதுன் தன் தாயுடன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, மீரா மிதுனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே மனிதாபிமான அடிப்படையில் அவர் மீதான பிடிவாரண்டை வலியுறுத்த விரும்பவில்லை என்றார். இதை பதிவு செய்த நீதிபதி கார்த்திகேயன், மீரா மிதுனுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்ப பெற்ற நிலையில் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+