விடிகாலையில் நுழைந்த திருடன்.. எட்டி பார்த்த சபலம்.. வாட்ச்மேன் மனைவியை.. ஷாக் கொடுத்த பால் வியாபாரி

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விடிகாலை வாட்ச்மேன் மனைவி அரை நிர்வாண கோலத்தில் தூங்கி கொண்டிருந்தார்.. வீட்டிற்குள் திருட வந்த நான் இதை பார்த்ததும் சபலம் வந்துவிட்டது.. அதனால்தான் கத்தியை காட்டி மிரட்டி அவரை பலாத்காரம் செய்ய முயன்றேன்" என்று பால் பாக்கெட் வினியோகம் செய்யும் ராமகிருஷ்ணா, போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார். இதையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாநகரில் அபார்ட்மென்ட் ஒன்றில் நேபாள நாட்டுக்காரர் பகதூர் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு வயது 30 ஆகிறது.

நாள் முழுவதும் வேலை என்பதால், அந்த அபார்ட்மென்ட்டில் மாடியில்தான் மனைவியுடன் தங்கி உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று விடிகாலை, குடியிருப்பு பகுதியின் வெளிப்பகுதியில் வாட்ச்மேன் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

வாட்ச்மேன்

வாட்ச்மேன்

அந்த நேரம் ஒரு மர்ம ஆசாமி நோட்டம் விட்டுக் கொண்டே வந்து, மொட்டை மாடியில் உள்ள வாட்ச் மேன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்.. அங்கே வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த வாட்ச்மேன் மனைவியை கத்தியை காட்டி பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் பிறகு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பி மனைவி அழுதவாறே நடந்ததை கூறியுள்ளார்.

மர்ம ஆசாமி

மர்ம ஆசாமி

பின்னர் இது தொடர்பாக அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில்புகார் தரப்பட, போலீசாரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த அப்பார்ட்மென்ட் மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர்.. அப்போது மர்ம ஆசாமி ஒருவர் சுற்றி கொண்டிருந்தது பதிவாகி இருந்தது. பச்சை கலர் டி-ஷர்ட் அணிந்து எல்லார் வீட்டு காம்பவுன்ட் சுவர்களிலும் ஏறி குதித்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.

சிசிடிவி கேமிரா

சிசிடிவி கேமிரா

அங்கெல்லாம் திருட எதுவும் இல்லாமல்தான் கடைசியாக வாட்ச்மேன் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. மொட்டை மாடி என்பதால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த சிசிடிவி கேமிராவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் யார் என போலீசார் மேலும் விசாரித்தபோதுதான், அந்நபர் அந்த பகுதியில் வீடு வீடாக பால் பாக்கெட் போடுபவராம்.. பெயர் ராமகிருஷ்ணன், அமைந்தகரை கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

பால் பாக்கெட் போடும்போது, ஆளில்லாத வீடுகள், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொண்டு இரவில் திருட வருவது தெரியவந்தது. இறுதியில் திருடன் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.. பெண்ணை பலாத்காரம் செய்தது பற்றி போலீசாரிடம் சொல்லும்போது, "வாட்ச்மேன் மனைவி அரை நிர்வாண கோலத்தில் தூங்கி கொண்டிருந்தார்.. திருட வந்த நான் இதை பார்த்ததும் சபலம் வந்துவிட்டது.. அதனால்தான் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றேன்" என்றார். இதையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+