விபச்சார பெண்ணுக்கு உதவி.. "கஸ்டமரை" மிரட்டியதாக சிக்கிய ஏட்டு.. தலைமறைவு
விபச்சார வழக்கில் ஏட்டு பார்த்திபன் தலைமறைவாகி உள்ளார்.
சென்னை: பெண்ணுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கோயம்பேடு ஏட்டு தலைமறைவாகி உள்ளார். எனவே அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் சேர்ந்து கோயம்பேடு ஏட்டு பார்த்திபனும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் பாடியை சேர்ந்த ஒரு கால்டாக்சி டிரைவர் விஸ்வநாதன் ஜெயந்தி வீட்டுக்கு கஸ்டமராக சென்றிருக்கிறார். ஜாலியாக இருந்துவிட்டு கிளம்பும்போது, ஜெயந்தியிடம் பணம் தந்திருக்கிறார். ஆனால் பணம் பத்தாது, இன்னும் வேண்டும் என்று ஜெயந்தி சண்டை பிடிக்கவும் அது தகராறாக வெடித்தது.

திரும்பிய கேஸ்
உடனே ஜெயந்தியிடம் இருந்து தகவலறிந்து வந்த ஏட்டு, ரெய்டுக்கு போவது போல சென்று, விசுவநாதன் பைக்கை எடுத்து கொண்டு வந்துவிட்டார். அதுமட்டும் அல்லாமல் ஜெயந்தி போலீசிலும் விஸ்வநாதன் மீது புகார் அளிக்க, கடைசியில் இவர்களுக்கு எதிராகவே இந்த கேஸ் திரும்பிவிட்டது.

சஸ்பெண்ட்
ஜெயந்தி செல்போனை ஆராய போனால், இருவரின் லீலைகளும் அதில் பளிச்சென தெரிந்தன. அதன்பிறகுதான் ஏட்டு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலையிலிருந்து அவரை உயரதிகாரிகள் சஸ்பெண்டும் செய்தனர்.

ஜெயந்தி சிறையிலடைப்பு
இதனையடுத்து ஜெயந்தியை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துவிட்டார்கள். ஆனால் ஏட்டு பார்த்திபனை நேற்றிலிருந்து காணவில்லையாம். எங்கு போனார் என்றே தெரியவில்லை என்பதால் அவரை தேடும் பணி நடக்கிறது.

2 தனிப்படைகள்
எப்படியாவது அவரை கண்டுபிடித்து கைது செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளார்களாம். அவரது போனும் நேற்றிலிருந்து ஸ்விட்ச் ஆப் ஆகியே இருக்கிறது. அதனால் ஏட்டுவை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications