பாஜகவில் இருந்து மீண்டும் வந்தவருக்கு பதவி.. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு!
பாஜகவில் இருந்து மீண்டும் மநீம கட்சிக்கு வந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி கமலஹாசன் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் ஆறுமுகம், அருணாச்சலம், முரளி அப்பாஸ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாஜகவில் இருந்து வந்தவருக்கு பதவி
அதில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

மீடியா மற்றும் ஐடி அணிகள் பிரிப்பு
கமல்ஹாசன் விரைவில் மேற்கொள்ள இருக்கும் கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறனின் அடிப்படையில் தான் இருக்கும் என கமல் அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடைக்கோடி தமிழர்க்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மீடியா மற்றும் ஐடி அணி நான்காக பிரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் மேற்கொண்ட பரப்பரை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பாற்றிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நற்பணி இயக்க நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகளிர் தினம்
மேலும் சர்வதேச மகளிர் தினத்தை மகளிர் அணி சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டதோடு,கலை, இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுக்க, பொது நல சேவைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் சார்பணிகள் துணைத் தலைவர் மௌரியா தலைமையிலும், கட்சி வளர்ச்சிப் பணிகள் தங்கவேலு தலைமையிலும் செயல்படும் என கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அருணாச்சலம்?
2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம். இவர் திடீரென மநீம கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இதனிடையே மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கே திரும்பினார். பாரத் ஜோடா யாத்திரை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றில் அருணாச்சலம் சிறப்பாக பணியாற்றியதால், இவருக்கு மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications