தமிழகத்தில் வரும் பிப். 7 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் பிப். 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகவே பல விஷயங்களும் ஆன்லைன் முறைக்கு மாறியுள்ளது. அதன்படி நீதிமன்றங்களும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தத் தொடங்கின.

டெல்டா கொரோனாவுக்கு பின்னர் நேரடி விசாரணை தொடங்கினாலும் கூட, மீண்டும் ஓமிக்ரான் அலை காரணமாகக் கடந்த மாதம் மீண்டும் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது,
இந்நிலையில், தற்போது 3ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வரும் பிப். 7 முதல் நேரடி விசாரணையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப். 7 முதல் நேரடியாகவும் காணொலி மூலமும் விசாரணை நடைபெறும் எனத் தலைமை பதிவாளர் பி தனபால் அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் 2 டோஸ் வேக்சின் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர் அறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் உணவகம், நூலகம் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications