ஒரு வாரமாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... காரணம் இதுதான்!
சென்னை: ஐந்து மாநில தேர்தல்கள் நெருங்கும் நிலையில், ஏழாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 93.11 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.17 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 81.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், லாரி உரிமையாளர்கள் தங்கள் வாடகையை உயத்தியுள்ளனர். இது மற்ற பொருட்களின் விலைகளும் விரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதமடித்த பெட்ரோல்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தியாவில் எரிபொருள்கள் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது.அதேபோல மாநில அரசுகளும் வாட் விதிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். இதனால் நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐயும் தாண்டியது.

கலால் வரி
எரிபொருள் விலையேற்றம் என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பாதிக்கும் என்பதால் இது நடுத்தரவர்க்கத்தினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தனது கலால் வரியைக் குறைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தேர்தல் அறிவிப்பு
இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கும், டீசல் 86.45 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது.

மாற்றம் இல்லை
பொதுவாகச் சர்வதேச அளவில் கச்ச எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், எப்போதெல்லாம் நாட்டில் தேர்தல்கள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இல்லை என்பது அறிவிக்கப்படாத விதியாகவே தொடர்கிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications