திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அட்வைஸ்..எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகளை நீக்கியிருக்காங்க.. உதயநிதி
சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகே வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு எதிர்பார்த்ததை போலவே எதிர்பார்த்ததை விட அதிக வாக்காளர்களை நீக்கியுள்ளனர். 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா அண்ணா பூங்கா அருகே 86 பேர் தங்கும் வகையில் 2,500 சதுரஅடி பரப்பில் இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 86.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இரவு நேர காப்பகத்தில் குடிநீர், மின்விசிறி, கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காப்பகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்று, இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி கூறியதாவது: மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கு இரவு நேர காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கு இரவு நேர காப்பகம் திறக்கப்படும். பிற இடங்களிலும் தேவையைப் பொருத்து திறக்கப்படும்.
ஆரம்பத்தில் இருந்தே எஸ்ஐஆர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். காலஅவகாசம் பத்தாது என்று கூறியுள்ளோம். பல மாநிலங்களில் முக்கியமாக பீஹாரில் எஸ்ஐஆர் வைத்து யார் யாருடைய வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார். எதிர்பார்த்ததை போலவே எதிர்பார்த்ததை விட அதிக வாக்காளர்களை நீக்கியுள்ளனர். 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. எங்கள் தலைவர் கட்சி நிர்வாகிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாங்குகள், விடுபட்டு போனவர்கள், யார் யார் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications