சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏறும் போது ஏத்துறீங்க.. அப்ப இறங்கும் போதும்... பெட்ரோல் டீசல் விலை குறித்து ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் , டீசலின் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

As global crude oil prices plunge, Govts must act swiftly to pass on the benefits to consumers: mk stalin

ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கச்சா எண்ணைய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு செய்தன. இதற்கு ரஷ்யா உடன்படவில்லை. மாறாக ரஷ்யா கச்சா எண்ணெய்யை தொடர்நது அதிக அளவு உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த சவுதி அரேபியா ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலையை ஒரேடியாக பாதியாக குறைத்துள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலை . பீப்பாய் 31.02 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது உள்ள சட்டப்படி தினசரி சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை மாற்ற வேண்டும். ஆனால் விலையேறும் போது மட்டும் மாற்றப்படும் நிலையில் குறையும் போது அதேவேகம் இருப்பதில்லை.

மத்திய பிரதேச அரசியல் திருப்பம்.. அமித்ஷா.. ஜேபி நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைமத்திய பிரதேச அரசியல் திருப்பம்.. அமித்ஷா.. ஜேபி நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 111.80 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.76 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 61.12 ரூபாய்க்கும் தான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 31.02 டாலராக உள்ள நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 73.33 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 66.75 ரூபாய்க்கும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், "சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் நன்மைகளை இந்திய மக்களுக்கு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலையில் குறைப்பு செய்தால் அது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் போது அதன் விலைகளை உயர்த்தும் அரசுகள், அது குறையும் போதும் குறைக்க வேண்டும் அல்லாவா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
mk stalin on twitter: As global crude oil prices plunge, Union & State Govts must act swiftly to pass on the benefits to Indian consumers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X