ஸ்தம்பித்த சென்னை புறநகர்! தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பும் மக்கள்.. விடிய விடிய உச்சத்தில் டிராபிக்
சென்னை: நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஒரே நேரத்தில் நேற்று பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இந்தியா முழுக்க நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகத் தீபாவளி இருக்கும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காகத் தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமையும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகத் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளைப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புவார்கள். இதால் அப்போது மட்டும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள்.. இந்த முறையும் அதேதான் நடந்தது.
சொந்த ஊர்: பொதுமக்கள் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளையும் இயக்கின. மேலும், ரயில், ஆம்னி பேருந்துகளிலும் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். இருப்பினும், ஒரே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதால் நேற்றைய தினம் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் பொதுமக்கள் சென்ற நிலையில், சென்னை புறநகரில் பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே இருந்தது.
மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பியதால் கூகுள் மேப்களிலும் கூட டிராபிக் நெரிசல் உச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. டிராபிக் உச்சத்தில் இருந்த நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் பல ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
புறநகர் பகுதிகள்: செ்னை புறநகர்ப் பகுதிகளில் டிராபிக் அதிகமாக இருந்தது. இதனால் முக்கிய சாலைகளிலும் கூட வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே ஏற்பட்டது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் அதிகமாக இருந்தது.
ஒரு பக்கம் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்தனர். மறுபுறம் கடைசிக்கட்ட தீபாவளி ஷாப்பிங்கிற்கு பொதுமக்கள் கடைவீதிகளை நோக்கிப் படையெடுத்தனர். இப்படி ஒரே நேரத்தில் பொதுமக்கள் சாலைகளில் படையெடுத்ததே டிராபிக் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. சென்னை புறநகரை விட்டு வாகனங்கள் தாண்டினாலே போதும் என்ற அளவுக்கு டிராபிக் அதிகமாக இருந்தது.
மேலும், செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிராபிக்கை சரி செய்ய போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். டூ வீலர்ககள் செல்ல தனிப் பாதை அமைப்பதும், வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடுவது போன்ற நடவடிக்கைகளைப் போக்குவரத்து போலீசார் எடுத்தனர்.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications