சென்னை மக்களே.. விறுவிறு மெட்ரோ பணிகளால்.. இன்று முதல் சென்னை கத்திப்பாரா அருகே போக்குவரத்து மாற்றம்
சென்னை: தலைநகர் சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்றான கத்திப்பாரா அருகே மெட்ரோ பணிகள் காரணமாகப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. இதற்கிடையே மெட்ரோ விரிவாக்க பணிகளாக இப்போது மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது.

இந்த வழித்தடங்களில் மெட்ரோ சேவை 2026 முதல் படிப்படியாக ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் மெட்ரோ சேவை முழுமையாக ஆரம்பித்தால் சென்னை விரிவான மெட்ரோ சேவையைக் கொண்ட நகராக மாறும்.
போக்குவரத்து மாற்றம்: இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நகரில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கத்திப்பாரா அருகே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் ஐந்தின் ஒரு பகுதியாக இருக்கும் போரூர் முதல் கத்திப்பாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் இப்போது நடந்து வருகிறது.
இதற்காக இப்போது பூந்தமல்லி சாலை முகலிவாக்கத்தில் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாகப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் நிலையில், இது குறித்து ஆவடி மாநகர ஆணையரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, "சென்னை பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை வழியாகச் சென்னை புறவழிச் சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையவும்.
எங்கே: சமயபுரம் அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கிச் செல்லும் மற்றும் கனரக வாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்றுப் பாதையில் ஆற்காடு சாலை வழியாகச் சென்று அவர்களது இலக்கை அடையலாம். குன்றத்தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கிச் செல்லும் அனைத்து வணிக வாகனங்களும் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) மாற்றுப்பாதையில் போரூர் சந்திப்பில் ஆற்காடு சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
சென்னை கத்திபாராவிலிருந்து போரூர் மற்றும் பூந்தமல்லி நோக்கிச் செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ( அரசு பேருந்துகள் தவிர்த்து ) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் இவ்வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்குச் சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எப்போது: இந்த போக்குவரத்து மாற்றம் இன்று ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை, ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை, ஜூலை 1 முதல் ஜூலை 3 வரை, ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை, ஜூலை 15 முதல் ஜூலை 17, ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதாவது இன்று முதல் அடுத்த மாதம் 22ஆம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 11 மணி முதல் முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, அதற்கேற்ப மக்கள் தங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications