பிரதமர் தமிழகம் வந்த நாளில் காங்.-கில் மற்றொரு விக்கெட் காலி! பாஜகவில் இணைந்தார் ராஜாஜி கொள்ளு பேரன்
சென்னை: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜி கொள்ளு பேரன் கேசவன் இன்று பாஜகவில் இணைந்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான காலமே இருந்து வருகிறது. அக்கட்சியின் பல மூத்த தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

சமீபத்தில் தான் உருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்த காங்கிரஸின் கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜாஜியின் கொள்ளுப் பேரனுமான சி.ஆர்.கேசவன் இன்று பாஜகவில் இணைந்தார்.
தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து வந்தனர். சி.ஆர் கேசவனும் காங்கிரஸில் தான் இருந்தார். 2001ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அவர், காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். கடந்த பிப். 23ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி..
பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய வளர்ச்சி இந்தியாவை பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வீடு பெற்றவர்களை எனக்குத் தெரியும். இப்போது இருக்கு அரசு மக்களுக்கு நேரடியாகத் திட்டங்களை வழங்குகிறது.
காங்கிரஸ் இப்போது எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உடன்பட்டேன் என சொல்ல முடியாது. இதன் காரணமாகவே தேசிய அளவில் எனக்கு அளித்த பொறுப்பை நான் நிராகரித்தேன். மேலும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதைத் தவிர்த்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கடைசி கவுர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. மத்திய உள்துறை அமைச்சராக இருந்துள்ள இவர், மெடராஸ் மாகாண முதல்வராகவும், மேற்கு வங்கத்திற்கு கவர்னராகவும் இருந்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications