இது ரொம்ப முக்கியம் ஆச்சே.. பெண்களுக்கு மாதம் ரூ.1000! புதிய தளர்வுகளால் வந்த மேஜர் மாற்றம்!
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இப்போது ஒரு மேஜர் மாற்றம் நடந்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2021இல் தேர்தல் பிரசாரத்தின் போதே திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 என்பதாகும்.. தேர்தல் பிரசாரத்தின் போதே இந்த வாக்குறுதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் பலரும் இத்திட்டம் குறித்தே கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே தான் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த முதல் அறிவிப்பு வெளியானது. வரும் செப். மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
உரிமை தொகை: கடந்த மாதம் இந்தத் திட்டம் குறித்துப் பல மேஜர் அறிவிப்புகள் வெளியானது. இத்திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது. மேலும், இதற்கான விண்ணப்பப் படிவங்களை ரேஷன் கடைகள் மூலம் பெறப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பங்களில் மொத்தம் 13 வகையான கேள்விகள் உள்ளன.. ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் இந்த விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் யார் தகுதி பெறுவார்கள்.. யார் தகுதி பெற மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்தத் திட்டத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் கீழ் பயன் பெறும் குடும்ப உறுப்பினர்களும் இந்த உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.
மேஜர் மாற்றம்: இருப்பினும் இந்த புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பட்ஜெட் செலவினம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் பயன் பெறுவோரின் பெண்களின் இறுதி பட்டியல் பட்டியல் தயாரானதும் எந்தளவுக்குச் செலவினம் அதிகரிக்கும் என்பது தெரிய வரும். சராசரியாக இது 5% முதல் 10% வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.. எத்தனை பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்று சேர்கிறது என்பதை அடிப்படையாக வைத்தே எந்தளவுக்குச் செலவினத்தை அதிகரிப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போது ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 5% முதல் 10% வரை அதிகம் செலவாகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செலவினம் அதிகரித்தால் 2023-24க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கீழ் கூடுதல் நிதி வழங்கப்படலாம்.. அல்லது துணை மதிப்பீடுகளில் இவை சேர்க்கப்படலாம். எந்தளவுக்கு கூடுதல் செலவாகும் என்பது துல்லியமாக தெரிந்த பிறகு, அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பட்ஜெட் தகவல்: கடந்த 2023-24 பட்ஜெட்டில் தான் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. அதில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை பெறப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 14.36 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 4.04 லட்சம் பேரும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இருந்து 2.63 லட்சம் பேரும் பயன்பெறுகின்றனர்.











Click it and Unblock the Notifications