தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா.. வாசல் வரை வந்து அழைத்து சென்ற புஸ்ஸி ஆனந்த்.. என்ன பொறுப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்துள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் பரந்தூரில் போராடிய மக்களை சந்தித்தார்.

vijay aadhav arjuna tvk

இதனால் விஜய் தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் எழுச்சியாக இருப்பார் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டன் பனையூரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு
நிர்வாகியையும் தனித்தனியாக சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்து வருகிறார்.

அதேபோல் தவெக தரப்பில் தமிழ்நாடு நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 38 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகள் நியமனம் தொடர்பான
அறிவிப்பை விஜய் வெளியிடவுள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்திருந்தார்.

இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்துள்ளார். ஏற்கனவே விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா செயல்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு
தேர்தல் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இதனால் தவெக-வில் இணையும் போதே அவருக்கு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் பிரிவை வழிநடத்தும் சிறப்பு பதவி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக அலுவலகம் வந்த ஆதவ் அர்ஜுனாவை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

இதன்பின் பனையூர் அலுவலகம் வந்த விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிடும் பணிகளில் கட்சியை தயார்ப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற எந்த பொறுப்பும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+