ஓபனா தெரியுதே! திமுக பக்கம் போகசை மாற்றிய மோடி! தேசிய அளவில் கவனம் பெற்ற தமிழ்நாடு.. அடுத்து அதுதானா
சென்னை: திமுக பக்கம் பாஜக தற்போது மொத்தமாக போகசை திருப்பி உள்ளது. காங்கிரசை எதிர்ப்பதை விட திமுகவைத்தான் பாஜக அதிகம் எதிர்க்க தொடங்கி உள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பிரதமர் மோடி 5 முறை மட்டுமே மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட 12 முறை தமிழ்நாடுய் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் பேச்சு அமைந்து இருந்தது. அந்த அளவிற்கு மாறி மாறி திமுக மீது விமர்சனங்களை வைத்தார்.

திமுக அமைச்சர் பேசியது தொடங்கி பல விஷயங்களை சுட்டிக்காட்டி மோடி பேசியது திமுக பக்கம் பாஜகவின் கவனம் திரும்பி உள்ளதை காட்டுகிறது. இதனால் வரும் நாட்களில் திமுக டெல்லி அமைப்புகளால் ஷார்ப்பாக குறி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி: ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார் . அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 3 நாட்கள் விசாரணை முடிந்துவிட்டது. இன்னும் 2 நாள் விசாரணை மீதம் இருக்கிறது. இன்று 4வது நாள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
பெரும் போராட்டத்திற்கு பின் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது. முதலில் இவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்பின் 8 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடி கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி கஸ்டடி கொடுத்தும் கூட அமலாக்கத்துறை இவரை கஸ்டடி எடுக்காமல், உடல்நிலையை காரணம் காட்டி, விசாரிக்காமல் விட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் போராடி அமலாக்கத்துறை 5 நாட்கள் கஸ்டடியை பெற்றுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.
மோடி பேச்சு - அடுத்து என்ன?: இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் திமுகவை விமர்சனம் செய்து பேசியதை பார்க்கையில் வரும் நாட்களில் மேலும் பல திமுக அமைச்சர்கள் குறி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொன்முடி: ஒரு பக்கம் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். அதேபோல் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறை விசாரணைக்கு கீழ் இருக்கிறார். மேலும் திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வாங்கப்பட்டதும் புகார் வைத்துள்ளது.
தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்கு: இன்னொரு பக்கம் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.
மேலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. இதன் மூலம் திமுக பக்கம் பாஜக தற்போது மொத்தமாக போகாசை திருப்பி உள்ளது. காங்கிரசை எதிர்ப்பதை விட திமுகவைத்தான் பாஜக அதிகம் எதிர்க்க தொடங்கி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications