மானசீக ஆதரவு.. இப்ப ஏன் "அந்த" வார்த்தையை சொல்றாரு.. சர்ருன்னு கிளம்பி போன சசி.. விரக்தியில் டிடிவி!
சென்னை: நேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென கொடுத்த பேட்டிக்கும்.. சசிகலாவின் தஞ்சை விசிட்டிற்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.. சசிகலா என்ன முடிவில் இருக்கிறார் என்று தெரியாமல் மொத்த அமமுக கேம்பும் குழப்பத்தில் இருக்கிறது.
சிறையில் இருந்து சசிகலா திரும்பி வந்தால் எல்லாம் மாறிவிடும்.. மீண்டும் அதிமுகவை கைப்பற்றிவிடுவார் என்றெல்லாம் டிடிவி தினகரன் நம்பிக்கொண்டு இருந்தார். இதனால்தான் சசிகலாவின் தமிழக வருகையும் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழகம் வந்தவர்.. சில நாள் ரெஸ்டுக்கு பின் மொத்தமாகவே அரசியலில் இருந்து விலகிவிட்டார். அம்மாவின் பொற்கால ஆட்சிக்கு வழி விடுவதாக கூறி அரசியலில் இருந்தே சசிகலா விலகிவிட்டார்.

என்ன
சசிகலாவின் இந்த முடிவை டிடிவி தினகரன் விரும்பவில்லை... சசிகலாவை சமாதானப்படுத்த அரை மணிநேரம் முயன்றேன். ஆனால் முடியவில்லை என்று டிடிவி தினகரனும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி இருக்கும் போது கொஞ்சம் கூட அரசியல் பற்றி பேசாமல் சசிகலா தன்னை அனைத்தில் இருந்தும் ஒதுக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தகவல்
மூன்று வாரத்தில் தேர்தல் வரப்போகிறது. ஆனால் சசிகலா அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. வீட்டில் கூட அரசியல் பற்றி வாய் திறக்கவில்லை. அமமுக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை. கூட்டணி பேச வந்த தேமுதிக நிர்வாகிகளை கூட சசிகலா பார்க்கவில்லை. .. பிரேமலதா முயன்றும் சந்திக்க முடியவில்லை .. ஏன் டிடிவி தினகரன் சசிகலா சந்திப்பதே மிகவும் அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. சசிகலா மொத்தமாக அனைத்தில் இருந்தும் ஒதுங்கிவிட்டார்.

ஒதுங்கிவிட்டார்
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கினாலும்.. சைலண்டாக ஏதாவது செய்வார்.. உள்ளடி வேலைகளை பார்ப்பார் என்று அரசியல் வல்லுநர்கள், அமமுகவினர் நம்பினார்கள். ஆனால் அது எதற்கும் இடம் கொடுக்காமல், அப்படியே மொத்தமாக கோவில், கடவுள் வழிபாடு என்று சசிகலா களமிறங்கிவிட்டார். சசிகலா எவ்வளவுதான் விலகி சென்றாலும்.. ஒரு பக்கம் டிடிவி தினகரன் இன்னும் சசிகலா மீது நம்பிக்கையில்தான் இருக்கிறார்.

நம்பிக்கை
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்.. அமமுகவிற்கு எப்போதும் சசிகலாவின் ஆதரவு இருக்கும். தேர்தலில் சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். டிடிவி தினகரன் எதை வைத்து இப்படி சொல்கிறார்.. எந்த நம்பிக்கையில் சசிகலா ஆதரவு தங்களுக்கு என்று சொல்கிறார் என தெரியவில்லை.

வெளியேற்றம்
ஆனால் சசிகலாவோ நேற்று தினகரன் பேட்டி கொடுத்த சில நிமிடத்தில் தஞ்சைக்கு கிளம்பி சென்றுவிட்டார் . குலதெய்வ வழிபாடு, குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்பு என்று தஞ்சைக்கு சசிகலா பறந்துவிட்டார். அரசியலும் இல்லை .. ஆதரவும் இல்லை என்று தினகரனிடம் சொல்லாமல் சொல்லும் அளவிற்கு சசிகலா தஞ்சைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

ஆதரவு
சசிகலா ஏதாவது வாய்ஸ் கொடுப்பார் என்று நம்பி இருந்த அமமுக உறுப்பினர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சசிகலா தஞ்சை சென்று இருக்கும் நிலையில் குறைந்தது 10 நாட்களாவது அங்குதான் இருப்பார் என்கிறார்கள். இதனால் தினகரன் உட்பட அமமுக நிர்வாகிகள் யாரையும் தேர்தல் சமயத்தில் அவர் சந்திக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது .
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications