திடீரென.. செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கைது வதந்தி பரவியது எப்படி?.. பரபர தகவல்கள்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கைது என வதந்தி பரவியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி எந்த நேரத்தில் கைது செய்யப்பட்டாரோ அப்போது முதல் அவருக்கு எதிராகவே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
முதலில் ரெய்டு நடந்தது, பின்னர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. சரி ஆட்கொணர்வு வழக்கில் எப்படியாவது வெளியே வந்துவிடுவார் என நினைத்தார். ஆனாலும் அத்தனை பாயிண்டுகளை போட்டு வாதாடியும் உச்சநீதிமன்றம் வரை போய் அவருடைய மனு தோற்றுவிட்டது.

அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை தங்கள் கஸ்டடிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் ஒரு நாளைக்கு 50 கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தம் அவரிடம் 250 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அசோக்குமாரை அமலாக்கத் துறை முன்பு ஆஜராகுமாறு 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. தனக்கும் இதய நோய் இருப்பதாக கூறி ஆஜராகாமல் இருக்கிறார். அவர் எங்கோ இருக்கிறார் என்பதை அமலாக்கத் துறை தேடி வருகிறார்கள். செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எல்லாமே தம்பிக்குத்தான் தெரியும் என கூறியிருந்தார்.
அதனால் அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தேடி வருகிறது. அசோக்குமார் சிக்கினால் நிறைய விஷயங்கள் வெளியே வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதனால் முடிந்த வரை அவரை அமலாக்கத் துறை கண்களில் சிக்கவைக்காமல் யாரோ பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் செந்தில் பாலாஜியின் தம்பி தனது குடும்பத்தினர், வேண்டப்பட்டவர்களிடம் பேசி வருகிறாராம்.
அப்படி தினமும் பேசி வந்த அசோக் திடீரென இரு நாட்களுக்கு பேசவில்லை. அசோக்குமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பதால் அந்த வேண்டப்பட்டவர்களுக்கு இவருடைய நம்பர் தெரியாதாம். எனவே அசோக்காக தொடர்பு கொண்டால்தான் பேச முடியுமாம். இப்படியான சூழலில் 2 நாட்கள் தொடர்ந்து அசோக் போன் செய்யாததால் ஒரு வேளை அசோக்கை அமலாக்கத் துறை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்துகிறார்களோ என சந்தேகித்தனராம்.
இதனால் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அசோக் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுவிட்டார் என கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தரப்பே கிளப்பிவிட்டார்களாம். இதையடுத்து இந்த செய்தி அனைத்து செய்தித்தாள்கள், நியூஸ் சேனல்களில் பரவியது. இதை நன்கு புரிந்து கொண்ட அமலாக்கத் துறையும் என்னதான் நடக்குது என ஒரு நாள் முழுக்க பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து அடுத்த நாள் நாங்கள் அசோக்கை கைது செய்யவில்லை என மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அசோக்குமாருக்கு வேண்டப்பட்டவர்கள் கூலானார்களாம். அவர்கள் போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகி அமலாக்கத் துறையே மறுப்பு தெரிவித்ததால் மகிழ்ச்சி அடைந்தார்களாம். பின்னர் இரு தினங்கள் கழித்து அசோக்குமார் வேண்டப்பட்டவர்களை அழைத்து பேசினாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications