அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம்
விருதுநகர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. பாப்பம்பட்டி அணி போல அதிமுக முகாம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது. கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி, விஜய் வீட்டு கதவை தட்டுவதாக ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது, "இன்றைக்கு கிறுக்கு பிடித்து, பேய் பிடித்தது போல பழனிசாமி அலைகிறார். கூட்டணிக்காக அங்கும், இங்கும் அலைந்து திரிகிறார். விஜய் வீட்டு வாசல் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டிக் கொண்டிருக்கிறார். விஜய் கதவை திறக்காமல் போயா என கூறிவிட்டார். விஜய் எங்கேயோ கிளம்பி சென்றுவிட்டார்.

அதிமுகவை புதைத்துவிட்டார்
7 இடைத்தேர்தல், நாடாளுமன்றத்தில் நான் போட்டியிட்ட தொகுதி உள்பட பல இடங்களில் அதிமுக டெபாசிட் காலியாகிவிட்டது. 14 இடங்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஒரு சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 3 லட்சம் வாக்குகளில் இரட்டை இலைக்கு வெறும் 5,000 வாக்குகள் தான் கிடைத்தன.
நாடாண்ட கட்சியை இவ்வளவு கீழ்நிலைக்கு தள்ளிவிட்டனர். எடப்பாடி பழனிசாமியை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். பழனிசாமியும், உதயகுமாரும் கடப்பாரை, மம்பட்டி எடுத்து குழி தோண்டி புதைத்துவிட்டனர். பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விதிகளை தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டனர்.
திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி
அதற்கு எதிராக நான் வழக்கு தொடர்ந்தேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வத்தில் களமிறக்கினார்கள். கடைசியில் அவர்களின் கதை தான் முடிந்தது. எடப்பாடி பழனிசாமி மக்கள் வாக்களித்து முதல்வராகவில்லை. அதிமுகவை அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்.
இந்த இயக்கம் (திமுக) 75 வருடங்களாக ஆலமரமாக இயங்கி வருகிறது. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்து கொண்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியமைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்தது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், மிகுந்த மனமகிழ்ச்சியையும் தருகிறது" என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications